பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

போகிறாய். அன்று என் மகள் தலையை உன் கையினால் தொட்டு ணையிட்டாய். இன்று நீ வாணியை மணம் செய்யப்போவதாகக் கூறுகிறார்கள். என் மகள் சாகக்கிடக்கிறாள். எங்கள் வீட்டுக்கு வரமாட்டாயா? இதோ இந்தக் கடிதத்தைப் படித்து என் மகளின் துயரத்தைத் தெரிந்துகொள்” என்று அந்தத் தாய் பேசினாள்.

“அந்தக் கதைகளை எல்லாம் நீ நம்பாதே. அந்தக் கிழவன் பண ஆசைகொண்டு வாணியை எனக்கு மணஞ்செய்துகொடுக்கத் துடிக் கிறான். எனக்கு அலுவல் இருந்தபடியால் வரமுடியவில்லை. இதோ இந்தத் தங்க வளைகளைக் கொண்டுபோய் உன் மகளுக்குக் கொடு. நான் இன்று திருவனந்தபுரம் போகிறேன். இன்னும் இரண்டு நாளில் திரும்பி வருவேன். வந்தவுடன் உன் வீட்டுக்கு வருகிறேன்" என்று பலதேவன் விடை கூறினான். அந்தத் தாய் பொன்வளைகளைப் பெற்றுக்கொண்டு போகிறாள். தோழன் பலதேவனைப் பார்த்து, “இது எத்தனையாவது இடம்? ஐந்தோ ஆறோ? வாணியை மணம்செய்து விலங்கு மாட்டிக்கொண்ட பிறகு இதெல்லாம் போய்விடும்” என்று கூறினான். “வாணியானால் என்ன, மனோன்மணியானால் என்ன! அதெல்லாம் உலகம் மதிப்பதற்காகக் கலியாணம். காரியத்தில் நமது இஷ்டம்போல் நடக்கவேண்டும். வா போகலாம். எனக்காக ஆட்கள் காத்திருப்பார்கள்” என்று கூறிக்கொண்டே பலதேவன் நண்பனை அழைத்துக்கொண்டு போய்விட்டான்.

மறைவாக இருந்த நடராஜன் கோபம் பொங்கத் தனக்குள்ளே பேசிக்கொள்கிறான்: "இவ்வளவு துஷ்டர்கள் இவ்வுலகத்தில் இருக்கிறார்களா ! பாதகன் ! கயவன் ! நற்குணமுள்ள வாணிக்குத் தகுந்தவனா இவன்? இவன் ஏன் திருவனந்தபுரம் போகிறான்? இவ்வாறு தனக்குள்ளே சிந்தித்துக்கொண்டிருக்கும்போது, அவன் நண்பன் நாராயணன் அங்கு வருகிறான். வந்த நாராயணனிடம், பல தேவன் திருவனந்தபுரம் போகிற காரியம் என்னென்று கேட்க, வாணியின் திருமணத்தைப்பற்றித் தூது போகிறதாகக் கூறினான். பிறகு, பலதேவனை மணக்கும்படி அரசன் வாணியை வற்புறுத்திக் கூறினான் என்றும், அதற்கு அவள் ‘செத்தாலும் அவனை மணஞ்செய்ய மாட்டேன்' என்று கூறியதாகவும் நடராஜனிடம் தெரிவிக்கிறான். “அப்படியா? சற்று முன்பு அவளைப்பற்றி வேறுவிதமாக எண்ணினேன்” என்றான் நடராஜன். நாராயணன், “பெண்மனத்தை எப்படி நம்புவது? செத்தாலும் பலதேவனை மணக்கமாட்டேன்' என்று கூறினாளே தவிர, உன்னை மணப்பதாக அவள் அரசனிடம் கூறவில்லையே? நீதான் அவளைப்பற்றி உருகுகிறாய்" என்றான்.