பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

66

101

“இல்லை; புருடரே தீயர். இரக்கமில்லா இருளுடைய நெஞ்சர். காதகர், கடையர்” என்றான் நடராஜன். “மாதர்கள் எவ்வளவுதான் ஓதியுணர்ந்தவரானாலும் உறுதியான மன மில்லாதவர்கள். கடலில் அலை வீசுவதுபோல அவர்கள் உள்ளம் நிலைத்திராமல் அலைந்து கொண்டேயிருக்கும்” என்றான் நாராயணன்.

நடராஜன் கூறுகிறான்: "கடலில் அலை அடிப்பது கரை ஓரத்திலேதான்; நடுக்கடலில் அலையில்லாமல் அமைதியாக இருக்கும். பம்பரம் சுழன்று சுழன்று ஆடினாலும் அது ஓரிடத்தை உறுதியாகப் பற்றிக்கொண்டு தான் சுழல்கிறது. அதுபோல, பெண்களின் மனம் புறத்தில் உறுதியற்றது போலத் தோன்றினாலும் அகத்தில் நிலைத்த உறுதியுள்ளவர்கள். அப்படியல்லர் ஆண்கள். திருமணத்தை ஓர் வாணிகமாகக் கொள்கின்றனர். வாழ்க்கை என்னும் கடலில் ஓடுவது ஆடவர் நெஞ்சம் என்னும் படகு. இந்த நெஞ்சமாகிய படகைப் பாதுகாப்புள்ள நல்ல துறையில் போய்ச் சேராதபடி எண்ணம் என்னும் காற்று அடித்து அப்படகைத் திசைகள் எங்கும் ஓடி அலையச் செய்கிறது. இவ்வாறு திசை தெரியாமல் அலைந்து திரியும் ஆடவர் நெஞ்சமாகிய படகை, பாதுகாப்பான குடாக்கடலில் செலுத்தி அறத் துறை என்னும் துறை முகத்தை அடையச்செய்து நங்கூரம் பாய்ச்சி நிறுத்துகிறவர் ஆடவரை மணந்த மங்கையர். அன்றியும், ஆடவர், வாழ்க்கையில் செயல் படும்போது பொய்யும் வழுவுமான வழிகளில் மோதுண்டு ஆசையென்னும் திசைகளில் அலைந்து திரியாமல் ஆடவ ராகிய மரக்கலத்தை நல்வழியில் செலுத்தும் சுக்கான் போன்றவர் மங்கையர். இதனை அறியாத ஆண்கள் மிருகங்களிலும் தாழ்ந்தவராய், சிற்றின்பத்தையே விரும்பித் தமது வாழ்க்கைத் துணைவரையும் தம்மையும் அழுந்தச் செய்யும் சேறாக மாற்றுகிறார்கள். தவஞ்செய்து மந்திர வாளைப் பெற்றவன், அவ் வாளினால் பகைவரை அழித்து நன்மை யடையாமல், தன்னைத்தானே மாய்த்துக்கொள்ளவும், தனக்குத் துணையா யுள்ளவர்களைத் துன்புறுத்தவும், அவ் வாளைப் பயன்படுத்துவது போல, அவர்கள் பாலையும் நஞ்சாகச் செய்யும் அறிவிலிகள். அன்பும் நல்ல குணமும் உள்ளவர் இல் வாழ்க்கைத் துணைவர்களானால், அவர்களுக்கு உலகத்தில் இல்லாதது யாது? அவர்களே கல்வியும் நல்லறிவும் உடையவர்களானால் பொன்மலர் மணம் பெற்றதுபோலாவர்.