பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

வந்த காரியத்தைக் கூறுக

என்றான் புருஷோத்தமன்.

தூதனாகிய பலதேவன் தொடர்ந்து கூறுகிறான்: "நெல்லை மாநகரத்திலே பாண்டிய மன்னன் புதிதாக அமைத்த கோட்டை பகைவரும் நாகராசனும் அஞ்சுந் தன்மையது. உயிர்களுக்கு உள்ள பிறப்பு இறப்பு என்னும் பெருங்கடலைவிட அகலமும், உயிர்களை வாட்டும் ஆணவ மலத்தைவிட அதிக ஆழமும் உடையது அக் கோட்டையின் அகழி. கோட்டை மதில்களோ, அஞ்ஞானத்தின் திண்மையைவிடப் பலமானவை. கோட்டை மதிலின்மேல் அமைத் துள்ள யந்திரப் படை முதலிய கணக்கில்லாத போர்க்கருவிகள், உலக விஷயங்களில் உயிர்களைச் செலுத்தி அழுத்தும் புலன்களைப் போன்றவை.”

66

99

வந்த அலுவலைக் கூறுக என்றான் புருஷோத்தமன்.

தூதுவன் கூறுகிறான்: “அரசர்பெருமானே! தங்கள் நாட்டின் தென் கிழக்கில் உள்ள நன்செய் நாடு, எங்கள் பாண்டியருக்கு உரியது. அங்கு வழங்கும் மொழியும் அங்குள்ள பழக்க வழக்கங்களும் இதற்குச் சான்று.

“ஆமாம், அதற்கென்ன?”

தூதுவன் தொடர்ந்து கூறுகிறான்: "உரிமையை நாட்டி வல்லமை யோடு ஆணை செலுத்தாத அரசர்கள் காலத்தில் நீங்கள் அந்த நன்செய் நாட்டைப் பிடித்துக்கொண்டு சதியாக ஆட்சி செய்கிறீர்கள். அந்த உரிமையை மீட்க எண்ணியே பழைய நகரமாகிய மதுரையை விட்டு நன்செய் நாட்டுக்கு அருகிலே திருநெல்வேலியில் கோட்டை அமைத்து அங்கு வந்திருக்கிறார் எமது பாண்டிய மன்னர்.”

"சொல்லவேண்டியதை விரைவாகச் சொல் என்றான் புருஷோத் தமன்.

தூதுவன்: "பாண்டியரும் சேரரும் போர் செய்தால் யார் பிழைப்பார்? சூரியனும் சந்திரனும் எதிர்ப்பட்டால் சூரியன் மறைய உலகில் இருள் மூடுவதுபோல, நீவிர் இருவரும் போர் செய்தால் உலகம் தாங்காது. ஆகவே, நீதியைக் கூறி நன் செய் நாட்டினை அதற்குரிய வரிடம் சேர்ப்பிப்பதே முறை என்பதைத் தெரிவித்துத் தங்களுடைய கருத்தைத் தெரிந்துகொள்ளவே என்னைத் தூது அனுப்பினார்.

“எல்லாம் சொல்லியாய் விட்டதா?” என்றான் சேர மன்னன்.