பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

105

தூதுவன்: “ஒன்று சொல்லவேண்டும். இரண்டு வேந்தரும் போர் செய்தால் உலகம் துன்பம் அடையும். அன்றியும், போரில் உமக்கு என்ன நேரிடுமோ? ஆகையினால், ஆண்சிங்கம் போன்ற ஜீவக அரசருடன் தாங்கள் போர்புரிவது நன்றல்ல” அதுகேட்டுப் புருஷோத் தமன் இகழ்ச்சிக் குறிப்போடு நகைக்கிறான். பலதேவன் மேலும் பேசுகிறான்: “நன் செய் நாட்டினைத் திருப்பிக் கொடுப்பது பெருமைக் குரியது அல்ல அன்று கருதினால், ஒரு உபாயம் கூறுகிறேன். பாண்டியன் அரண்மனையில் மனோன்மணி என்னும் மலர் அலர்ந் திருக்கிறது. அம் மலரின் தேனை உண்ணும் வண்டு இங்குத் திருவனந் தபுரத்தில் இருக்கிறது. மனோன்மணி,தங்கள் அரியாசனத்தில் அமர்ந்தால், பாண்டியன் போரிடமாட்டான்; நன்செய் நாடும் தங்களுக்கே உரிய தாகும்.

புருஷோத்தமன், “ ஓகோ! மலரிடம் செல்ல வண்டைக் கொண்டு போகிறார்கள் போலும்! நல்லது. இருவரும் காதல் கொண்டால் அல்லது எமது நாட்டில் திருமணம் நிகழாது. அன்றியும் எமது அரியாசனம் இரண்டு பேருக்கு இடங்கொடாது. இதனை அறிவாயாக" என்றான். தூதுவனாகிய பல தேவன், "நல்லதாயிற்று, மனோன்மணியின் திருமணம் தடைப்பட்டது” என்று தனக்குள் எண்ணிக்கொள்கிறான். புருஷோத்தமன் தொடர்ந்துகூறுகிறான்: "ஆகவே, நீ சொன்ன மணச் செய்தியை மறந்துவிடு. நன்செய் நாட்டைப்பற்றி நீ பேசின பேச்சு நகைப்பை உண்டாக்குகிறாது.நமது அமைச்சரிடம் வந்து புகலடைந்து, நடைப்பிணம் போல தலைவாயிலின் நின்று, தமது முடியையும், செங் கோலையும் கப்பமாகக் கொடுத்துக் கைகட்டி வாய்பொத்தி மன்னர்கள் நிற்க, அவரது மனைவியர் வந்து தமது மங்கல நாணை நிலைக்கச் செய்யவேண்டுமென்று கெஞ்சுகிற எமது சபையிலே, நீ வந்து அஞ்சாமல் ‘நஞ்செய் நாட்டினைப் பாண்டியனுக்குக் கொடு' என்று கூறிய பிறகும் நீ இன்னும் உயிருடன் இருப்பது நீ தூதுவன் என்னும் கார ரணம் பற்றியே. சற்றும் சிந்திக்காமல் உன்னை வரவிட்ட பாண்டியன் யாருடைய பகையும் இல்லாதபடியால், இதுகாறும் முடிசூடி அரசாண்டான். இன்னும் ஒருவார காலத்தில் அறிவான். நீ புகழ்ந்து பேசிய கோட்டையும் நீ ஆண்சிங்கம் எனக் கூறிய அரசனும் உண்மையில் இருப்பார்களானால், அந்த வலிமையையும் பார்ப்போம்' என்று சொல்லி அருகிலிருந்த சேவகனிடம், சேனாதிபதி அருள் வரதனை அழைக்கும்படி கட்டளையிட்டான்.