பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

அருள்வரதன் வந்து வணங்கி நிற்க, புருஷோத்தமன் அவனிடம், "பாண்டியனுடைய நெல்லை நகரத்துக்கு நாளை புறப்படுகிறோம். நமது படைவீரர்களை ஆயத்தப்படுத்துக" என்று கூறி, மீண்டும் தூதுவனிடம் கூறுகிறான்: "நீ விரைந்து போய்க்கொள். பாண்டியன் போரில் வல்லவனானால் ஒரு வாரத்துக்குள் நாம் அங்கு வருவோம் - அவன் சேனையுடன் கோட்டையைப் பலமாகக் காத்துக் கொள்ளட்டும். இல்லையானால், எனது அடியில் அவன் முடிவைத்து வணங்கி நமது ஆணைக்கு அடங்கி நடக்கட்டும். வீணாகத் தூது அனுப்பியதற்கு வஞ்சி நாட்டின் விடை இது. விரைந்துபோய்ச் சொல்லுக.” இவ் விடையைக் கேட்டுக் கொண்டு பலதேவன் சென்றான்.

சேனாதிபதியாகிய அருள்வரதன் சென்று போர்வீரர்களை எல்லாம் அழைத்துப் போருக்குப் புறப்பட ஆயத்தமாக இருக்கும்படி சொல்கிறான். வீரர்கள் போர்ச் செய்தி கேட்டு மகிழ்கிறார்கள். "இது காறும் போர் இல்லாமல் சோம்பிக் கிடந்தோம். போர் இல்லா நாளெல் லாம் பிறவா நாளே என்று ஏங்கிக் கிடந்தோம். நல்ல வேளை யாகப் போர்வந்தது" என்று மகிழ்கிறார்கள். “நாளை காலையில் நெல்லைக்குப் புறப்பட்டுப் போகிறோம். கோட்டையை முற்றுகையிட்டுப் பிடிக்கவேண்டும். போருக்குச் செல்ல ஆயத்தமாக இருங்கள்!” என்று சேனைத் தலைவன் கூறியதைக் கேட்டுக்கொண்டு வீரர்கள் தத்தம் இருக்கைக்குப் போகிறார்கள்.