பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜீவகன்:

குடிலன்: 10

5

LO

-

15

இரண்டாம் அங்கம்

முதற் களம்

இடம் : அரண்மனை.

காலம்: வைகறை.

(ஜீவகனும் குடிலனும் மந்திராலோசனை)

(நேரிசை ஆசிரியப்பா)

சொல்லிய தெல்லாஞ் சுந்தர முனிவரே! புருடோத் தமனெனும் பொறையனே நமக்கு மருமா னாக மதித்ததும் அவரே;

என்றுங் குழந்தை யன்றே; மன்றல்

விரைவில் ஆற்ற வேண்டும்; நாம் இது வரையும் மறதியா யிருந்தது தவறே யாம் இனித் தாமத மின்றியிம் மணமே கருமமாய்க் கருதி முடிப்பாம்; வருமுன் கருதும் மந்திர வமைச்சே!

இறைவ! இதுகேட் டெனக்குள இன்பம் அறைவதெப் படியான்? அநேக நாளாப் பலமுறை நினைத்த துண்டிப் பரிசே; நலமுறப் புரிசை நன்கு முடியும் அற்றம் நோக்கி யிருந்தே னன்றிச் சற்றும் மறந்தே னன்று; தனியே

கட்டளை பிறந்துங் கடிமணந் தன்னை

விட்டுள தோஇனி வேறொரு காரியம்?

புருடோத் தமனெனும் பொருநைத் துறைவன் காண்டகும் ஆண்டகை யென்றும், ஞானம்

1

பொறையன் - சேர அரசன். ஆற்ற - செய்ய. மருமான் - மருமகன். மந்திரம் - சூழ்ச்சி, ஆலோசனை. அறைவது - சொல்லுவது. இப்பரிசு - இவ்விதம், இப்படி. அற்றம் - காலம். பொருநை - சேர நாட்டில் உள்ள ஒரு ஆறு. பொருநைத் துறைவன் - சேர அரசன்.