பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

குடி:

ஜீவ:

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

குற்றமோ அதுவுங் கொற்றவ! முனிவர்

அறிந்ததவ் வளவே யாகும். ஏழை!

துறந்தா ரறிவரோ தூதின் தன்மை? 205 இகழ்ச்சியும் புகழ்ச்சியு மின்பமுந் துன்பமும் எல்லா மில்லை; ஆதலால் எவருங் கட்டுக கோவில் வெட்டுக ஏரி,

என்று திரிதரும் இவர்களோ நமது நன்றுந் தீதும் நாடி யுரைப்பர்? 210 இராச்சிய பரண சூத்திரம் யார்க்கும் நீச்சே யன்றி நிலையோ? நடேசன்! யோசனை நன்று! நடேசன்! ஆ! ஆ! ஏதோ இவ்வயிற் சூதாப் பேதையர் உள்ளம் மெள்ள உண்டு மற்றவர் 215 அம்மை யப்பரை அணுகா தகன்று தம்மையும் மறந்தே தலைதடு மாறச் செய்யுமோர் சேவக முண்டுமற் றவன்பால், ஐயமொன் றில்லை. அதனால் மொய்குழல் மாதர்பால் தூதுசெல் வல்லமை கூடும்.

220 பித்த னெப்படிச் சுந்தரர்க்கு

ஒத்த தோழனா யுற்றனன்! வியப்பே!

13

-

முனிவரும் வரவர மதியிழந் தனரே!

இருக்கும், இருக்கும். இணையறு குடில!

பொருக்கெனப் போயுன் புதல்வற் குணர்த்தி

சால விளம்பனஞ் சாலவுந் தீதே.

225 விடுத்திடு தூது விரைந்து;

14

இராச்சிய பரண சூத்திரம் - இராச்சியத்தை ஆளும் முறை. இவ் வயின் - இவ்விடத்தில். சூதா - சூதாக. பேதையர் - பெண்கள். சேவகம் - வீரம். “பித்தன் எப்படிச் சுந்தரர்க்கு, ஒத்த தோழனாய் உற்றனன்” என்னும் அடிக்கு, 'பித்தனாகிய நடேசன் சுந்தரமுனிவருக்கு எப்படி ஒத்த நண்பனாக ஆனான்' என்று ஒரு பொருளும், 'பித்தனாகிய சிவ பெருமான் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு எப்படி ஒத்த நண்பனானான்' என்று வேறொரு பொருளும் தோன்றுவது காண்க. இணையறு ஒப்பில்லாத. பொருக்கென - விரைந்து.