பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

குடி:

ஜீவ:

முதற் பிரபு:

நாராயணன்:

2-ம் பிரபு:

ஈதோ அனுப்பினேன்; இன்றிம் மாலையில் தூது செல்வான் தொழுதுன் அநுமதி பெறவரு வான்நீ காண்டி;

230 இறைவ! மங்கல மென்றுமுன் னடிக்கே! (குடிலன் போக)

(தனதுள்)

நல்லது! ஆ! ஆ! நமது பாக்கியம்

அல்லவோ இவனை நாம் அமைச்சனாய்ப் பெற்றதும்?

என்னே! இவன்மதி முன்னிற் பவையெவை?

117

15

(சில பிரபுக்களும் நாராயணனும் வந்து வணங்க) (பிரபுக்களை நோக்கி)

வம்மின், வம்மின், வந்து சிறிது

235 கால மானது போலும், நமது

மந்திரி யுடன்சில சிந்தனை செய்திங்கு இருந்தோம் இதுவரை, குடிலன் மிகவும் அருந்திறற் குழ்ச்சியன்.

அதற்கெ னையம்?

சுரகுரு பிரசுரன் முதலவர் சூழ்ச்சி 240 இரவலா யிவன்சிறி தீந்தாற் பெறுவர். எல்லை யுளதோ இவன்மதிக் கிறைவ! வல்லவன் யாதிலும்.

(தனதுள்)

நல்லது கருதான

வல்லமை யென்பயன்!

மன்னவ! அதிலும்

உன்தொல் குலத்தில் உன்திரு மேனியில்

245 வைத்த பரிவும் பத்தியு மெத்தனை!

குடிலனுன் குடிக்கே யடிமை பூண்ட

கால வளம்பனம் - காலம் தாழ்த்தல். திறல் - வலி. சுரர் - தேவர். சுரகுரு – தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதி; வியாழன் என்றும் கூறுவர். பிரசுரன் - அசுர குருவாகிய சுக்கிராச்சாரி. திருமேனி - அரசனைக் குறிக்கும் சொல். மலையாள நாட்டினர் அரசனைத் திருமேனி என்று விளிப்பது வழக்கம். இந்நூலாசிரியர் மலையாள நாட்டில் வசித்து.