பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

ஜீவ:

நாரா:

ஜீவ:

யாவரும்:

ஜீவ:

119

265 கிணையோ தன்னய மெண்ணாப் பெருமையில்? (நாராயணன் மூக்கிற் கரி தேய்த்துவர)

(நாராயணனை நோக்கி)

ஏ! ஏ! நாரணா கரியா யுன்மூக்

கிருந்தவா றென்னை? ஏ! ஏ! இதுவென்!

மூக்கிற் கரிய ருளரென நாயனார் தூக்கிய குறளின் சொற்படி, எல்லாம் 270 உள்ளநின் னருகவ ரில்லா ராவரோ?

ஓகோ! ஓகோ! உனக்கென் பைத்தியம்;

ஓகோ! ஓகோ! ஓகோ! ஓகோ!

(யாவரும் நகைக்க)

முதற் பிரபு:

நாரணா! நீயும் நடேசன் தோழனே.

(பிரபுக்களை நோக்கி)

நல்லது; விசேடமொன் றில்லை போலும்.

275 இல்லையெம் இறைவ! எல்லாப் புவியுநின் வாகுவே தாங்க! மங்கலம் வரவே!

(பிரபுக்கள் போக)

ஜீவ:

நாராயணா! உனக் கேனிப் பித்து? தீரா இடும்பையே தெளிவி லையுறல்.

வீரவாகு - முருகக் கடவுளின் சேனாபதி. இராமனிடத்தில் பரதனும், முருகனிடத்தில் வீரவாகு தேவரும் உண்மைப் பக்தி கொண்டிருந்தது போல, குடிலன் ஜீவகனிடம் உண்மைப் பக்தி கொண்டுளான் என்பது கருத்து. தன்னயம் எண்ணா

சுயநலம் நினைக்காத. நாயனார் – திருவள் ளுவ நாயனார். தூக்கிய குறள் - ஆராய்ந்து கூறிய திருக்குறள். 268 அடி. “புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி மூக்கிற் கரியா ருடைத்து” என்னும் திருக்குறளைச் சுட்டுகிறது இவ் வாக்கியம். நின் அருகு உன் பக்கத்தில். அவர் - 'அகங் குன்றி மூக்கிற் கரியார்'. வாகு - தோள். ஐயுறல் - ஐயப்படுவது.

-