பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

305 விழிப்பா யிருக்கிற் பிழைப்பர்; விழியிமை கொட்டிற் கோடி பிறழுமே. கொட்டும் வாலாற் றேளும். வாயாற் பாம்புங் காலும் விடமெனக் கருதி யாவும் அடிமுதன் முடிவரை ஆய்ந்தா ராய்ந்து 310 பாரா ராளும் பாரென் படாவே?

யாரையான் நோவ! அதிலுங் கொடுமை! அரசர்க் கமைச்சர் அவயவம் அலரோ? உறுப்புகள் தாமே உயிரினை யுண்ண ஒருப்படில் விலக்குவ ருளரோ? தன்னயம் 315 மறந்து மன்னுயிர்ச் சகமே மதித்தங் கிறந்தசிந் தையனோ இவனோ அமைச்சன்? குடிலன் செய்யும் படிறுகள் வெளியாப் பொய்யும் மெய்யும் புலப்பட உரைக்க என்றால், நோக்க நின்றார் நிலையில்

320 தோன்றுஞ் சித்திர வொளிபோ லியார்க்குஞ் சான்றொடு காட்டுந் தன்மைய வலவே. சித்திரப் பார்வை யழுந்தார்க் கெத்தனை காட்டினுங் கீறிய வரையலாற் காணார்.

என்செய? இனியான் எப்படிச் செப்புவன்? 325 நிந்தையா நடேசனைப் பேசிய குறிப்புஞ் சிந்தனை செய்ததாச் செப்பிய செய்தியும் ஓரில் யாதோ பெரிய உறுகண்

நேரிடு மென்றென் நெஞ்சம் பதறும். என்னே யொருவன் வல்லமை!

330 இன்னும் பிழைப்பன் மன்னன் விழிக்கிலே.

121

17

(நாராயணன் போக)

இரண்டாம் அங்கம்: முதற் களம் முற்றிற்று.

-

காலும் விடம் - விஷத்தை உமிழும், பாரார் - பாராதவர்கள். படிறு - வஞ்சகம், பொய். சித்திரப் பார்வை அழுந்தார்க்கு ஓவியத்தைப் பார்க்கும் முறைப்படி பார்க்கத் தெரியாதவர்களுக்கு வரை – கோடு, கீறல். உறுகண் – துன்பம்.