பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

நொந்தது புண்ணா யென்னுளங் கேட்க. மெய்ச்சுகம் இதுவாம்! விளம்புவ தென்னினி? இச்சண் டாளனும் வாணியும்! ஏற்கும்!

ஒருபிடி யாயவன் உயிரினை வாங்க

85

ஓடிய தெண்ணம்; உறுத்தின தென்கை! தீண்டவும் வேண்டுமோ தீயனை? என்னிவன் அனந்தைக் கேகுங் காரியம்? யாருடன் வினவ? நாரணனோ அது? (நாராயணன் வர)

90

வாவா, நாரணா!

நாராயணன்:

நட:

நாரா:

நட:

நாரா:

நட:

நாரா: நட:

நாரா:

சினந்தனை தனியாய்?

ஏ! ஏ! என்னை!

ஏன் இத் தீயவன்

யார்? யார்?

அனந்தைக் கேகுங் காரணம்?

அறிவை! நீவிளை யாடலை; அறைதி. வதுவை மனோன்மணி தனக்கு வழங்கிட 95 அதுவும் நன்றே! கெடுவனிவ் வரசன்!

அடுத்தது வாணியின் மணமும், அறைந்துளேன் விடுத்திடவ் வெண்ணம்; தடுக்கையா னறிவன்; விடுத்தனன் கண்டும்; எரித்திடு வேன்நொடி. உறுதியொன் றுளதேல்! உரையாய் நடந்தவை. 100 முதியவ ருசிதனுக் குரைக்க மற்றவன் வதுவையவ் வழியே யாற்றிட வாணியை அதட்டினன்.

நட:

நாரா: நட:

நாரா: நட:

அதற்கவள்?

மறுத்தனள்.

எங்ஙனம்?

‘இறக்கினும் அதற்கியா னிசையேன்' என்றாள். அரைக்கண முன்னம் அறிந்திலே னிம்மொழி.

127

அனந்தை - திருவனந்தபுரம், சேரவேந்தனின் தலைநகரம். அறைதி சொல்லுக. உசிதன் - பாண்டியன்.