பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

நாரா:

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

105 என்னே யுன்மதி! ஏந்திழை யார்சொல் நீர்மே லெழுத்தாம்; யாரறி வாருளம்? மாறி நாடொறும் வேறுபா டுறுமதி

யெண்ணுட் பட்டு நிண்ணயங் கூடலாற் பெண்கள் நிலையிற் பெரிதுந் திடனே.

110 புண்கொள் நெஞ்சொடு புலம்புகின் றாய்மிக. காதலா மூழிக் கனன்முன் வையாய் மாதரார் கட்டுரை மாயா தென்செயும்? அக்கண முற்ற துக்கந் தூண்டக் கன்னியா யிருப்ப னென்றா என்றி

115 யன்ன தவள்கருத் தாமோ?

நட:

நாரா:

நட

அறியாய்!

புருடரே புலையர்; நிலையிலாப் பதடிகள்; இருளடை நெஞ்சினர்; ஈரமி லுளத்தர்;

ஆணையு மவர்க்கொரு வீணுரை; அறிந்தேன். தந்நய மன்றிப் பின்னொன் றறியாக்

120 காதகர்; கடையர்; கல்வியில் கசடர் ஓதி யுணரினும் மாத ருள்ளம்

அலையெறி கடலினுஞ் சலன மென்ப.

திரைபொரல் கரையிலும் வெளியிலு மன்றி கயத்திலும் அகத்திலுங் கலக்க மவர்க்கிலை.

125 தியக்கமும் மயக்கமுஞ் செறிவ தரிவையர்.

-

உறு - அடைகிற. மதி - அறிவு. நிண்ணயம் - நிர்ணயம், உறுதி. திடன் உறுதி. ஊழிக் கனல் யுக முடிவில் உண்டாகிற தீ. வையாய் வைக்கோலாக. மாதரார்- பெண்கள். மாயாது அழியாமல். பதடிகள் பதர்போன்றவர். ஈரம்இல் - அன்பு இல்லாத. காதகர் - கொலை காரர். சலனம் – அசைவு, கலக்கம். திரைபொரல் - அலை யடிப்பது, மனங் கலங்கவது. கயம் - ஆழமான நீர்நிலை. அகம் - உள்ளே, மனம். அவர்க்கு – கயத்துக்கும், பெண்களுக்கும்.

123- 125 வரியின் கருத்து : நீர் நிலைகளில் அலையடிப்பதும் மகளிர் மனங் கலங்குவதும் வெளியில் அல்லாமல் அகத்தில் அல்ல என்பது. செறிவது அடர்வது, நெருங்குவது. அரிவையர் - பெண்கள்.