பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

பெற்றவா றன்றோ? எற்றே மடமை! கேட்டிட வேட்டவை யாவையும் ஈயுங் கற்பக தருவென அற்பமுங் கருதாது 170 அடியுடன் முறித்து முடிபுற வெரித்துக் கரிபெற முயன்ற கம்மிய னேயென, தனக்கென வாழுந் தனிமிரு கத்தின் மனக்கோள் நிமிர்த்து மற்றைய ரின்பமுந் துன்பமுந் தனதா அன்புபா ராட்ட,

175 மெள்ளமெள் ளத்தன் உள்ளம் விரித்துப் பொறையுஞ் சாந்தியும் படிப்படி புகட்டிச் சிறிது சிறிதுதன் சித்தந் தெளித்துத் தானெனு நினைப்புந் தனக்கெனு மிச்சையும் ஓய்வுறச் செய்து மற் றென்றாய் நின்ற 180 எங்கு நிறைந்தபே ரின்ப வெள்ளம் முங்கி யதனுள் மூழ்கிட யாரையும் பக்குவஞ் செய்யுநற் பள்ளிச் சாலை, இவ் இல்லற மென்பதோர் நல்லுணர் வின்றி, உடல்தின வடக்குமா உரைஞ்சிடு தடியென

131

உளதேல் - இருக்குமானால். நாற்றம் – மணம், வாசனை. எற்றே- என்னே. வேட்டவை - விரும்பியவை. கற்பக தரு கற்பகமரம். - இது தேவலோகத்தில் இருப்பது. இம்மரத்தின் கீழிருந்து வேண்டிய பொருளை நினைத்தால் அதனைத் தருவது.

வரி: 168 - 171. நினைத்ததைக் கொடுக்கும் கற்பகமரத்தைக் கரிக்காக வெட்டிய கொல்லனைப்போல.

மனக்கோள் - மனத்தின் கோணல். உள்ளம் விரித்து - மனத்தை அன்பினால் விரிவுபடுத்தி. பொறை - பொறுமை. சாந்தி – அமைதி. ஓய்வுற - ஓயும்படியாக. முங்கி - முழுகி. மலையாள நாட்டு வழக்கு. உடல் தினவு அடக்கும் - உடம்பின் தினவை நீக்கும். மா உரைஞ்சிடு தடி - மிருகங்கள் தினவு தீர உராய்ந்துகொள்ளும் மரக்கட்டை.