பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -20

185 மடத்தனங் கருதித் தம்மையும் பிறரையுங்

கெடுத்திடு மாந்தரின் கெடுமதி யென்னே! நாரணா! இவ்வயிற் கேட்டதுங் கண்டதுந் தீராத் துயரமே செய்வது செல்குவன்

ஏதா யினுமினி எய்தில்,

190 ஓதாய் முனிவர் உறையு ளுற்றே.

(நடராஜன் போக)

(நேரிசை ஆசிரியப்பா)

நாரா:

(தனிமொழி)

நல்லது மிகவும்! செல்லிடந் தோறுங்

கதையா யிருந்தது. கண்டதென்? கேட்டதென்? புதுமையிங் கிதுவும்! பொருந்துவ

தெதுவா யினுஞ்சரி. ஏகுவம் மனைக்கே.

(நாராயணன் போக)

இரண்டாம் அங்கம்: இரண்டாம் களம் முற்றிற்று.

·

1

2

172- 186 வரியின் கருத்து: தனக்காக மட்டும் வாழ்கிற மிருகத் தன்மை யுள்ள மனக்கோட்டத்தை நிமிர்த்திப் பிறர் இன்ப துன்பங்களையும் தனதெனக் கருதுவதனாலே, பையப் பைய மனத்தை விரிவடையச் செய்து, பொறுமையையும் அன்பையும் படிப்படியாக ஊட்டி, அறிவு தெளிந்து நான் எனது என்னும் சுயநலத்தை அடக்கி எங்கும் நிறைந்து பேரின்பமாய் நின்ற பேரின்ப வெள்ளத்தில் மூழ்கச் செய்து யாவரையும் பக்குவப்படுத்துகிற பாடசாலையாக இருப்பது இல்லற வாழ்க்கை என்பதை அறியாமல், தினவுகொண்ட மிருகங்கள் உராய்ந்து தினவு தீர்த்துக்கொள்ளும் மரக்கட்டை போல, மடத் தனத்தினால் தம்மையும் பிறரையும் கெடுக்கும் மனிதரின் கெடுமதி என்னே என்பது.

எய்தில் - நிகழ்ந்தால், உற்று அடைந்து, வந்து.