பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135

(சேவகன் வர)

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

சேவகன்:

புரு:

45

போரெவ ருடனே யாயினும் புரியிலவ் ஆரவா ரத்தில் அயர்ப்போ மன்றி...

எழுதரு மேனி இறைவ! நின் வாயிலில் வழுதியின் தூதுவன் வந்துகாக் கின்றான் யாரவன்?

பேர்பல தேவனென் றறைந்தான்

சேவ:

புரு:

(தனதுள்)

50

சோரன்!

(சேவகனை நோக்கி) வரச்சொல்.

(தனதுள்)

தூதேன்? எதற்கிக்

கயவனைக் கைதவன் அனுப்பினான்? நயந்தீ துணர்ந்து நட்டிலன் போன்மே.

1

(பலதேவன் வர)

பலதேவன்:

மங்கலம், மங்கலம்! மலய மன்னவ! பொங்கலைப் புணரிசூழ் புவிபுகழ் சுமக்கத்

55 தன்தோள் தாரணி தாங்க எங்கும் ஒன்னார் தலையோடு திகிரி யுருட்டிக் குடங்கை யணையிற் குறும்பர் தூங்க இடம்பார்த் தொதுங்குந் தடமுற் றத்து மேம்படு திருநெல் வேலிவீற் றிருக்கும்

மலைய

போர் -சண்டை. வழுதி - பாண்டியன். கயவன் - கீழ்மகன். கைதவன் பாண்டியன். போன்ம் -போலும். மலைய மன்னவ மலைக்கு அரசனே. மலயமலை பாண்டியனுக்கு உரியது. ஆனால், தூதுவன் சேரனை மலையமலைக் குரியவனாகக் கூறுகிறான். புணரி - கடல். புவி புகழ் சுமக்க - உலகம் பாண்டியனுடைய புகழைச் சுமக்க. தன்தோள் பாண்டியனுடைய தோள். தாரணி தாங்க- பூமியைத் தாங்க; அதாவது அரசாட்சி செய்ய. ஒன்னார் - பகைவர். திகிரி - ஆணையாகிய சக்கரம். குடங்கை - உள்ளங்கை. குறும்பர் குறுநில மன்னர், சிற்றரசர். தடமுற்றம் - பெரிய முற்றம்.