பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

புரு:

60

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

வேம்பார் ஜீவக வேந்தன் விடுத்த

தூதியான். என்பே ரோதில் அவ் வழுதியின்

மந்திரச் சிகாமணி தந்திரத் தலைவன்.

பொருந்தலர் துணுக்குறு மருந்திறற் சூழ்ச்சியன், குடிலேந் திரன்மகன்...

(தனதுள்)

மடையன்

வந்ததென்?

பல:

65

பௌவம்

70

அப்பெரு வழுதி யொப்பறு மாநகர் நெல்லையிற் கண்டு புல்லார் ஈட்டமும் அரவின தரசும் வெருவி ஞெரேலெனப் பிறவிப் பௌவத் தெல்லையும் வறிதாம் ஆணவத் தாழ்ச்சியும் நாண அகழ்வலந் தொட்டஞ் ஞானத் தொடர்பினு முரமாய்க் கட்டிய மதிற்கணங் காக்க விடயத்து எட்டி யழுத்தி இழுக்கும் புலன்களின் யந்திரப் படைகள் எண்ணில இயற்றி...

-

வேம்புஆர் - வேப்பமாலையை யணிந்த, பொருந்தலர் - பகைவர். துணுக்குறும் - அஞ்சும், நடுங்கும். திறல் அஞ்சும், நடுங்கும். திறல் - வலி, வெற்றி. கண்டு- அமைத்து. புல்லார் - பகைவர். ஈட்டம் கூட்டம். அரவினது அரசு - பாம்பரசனாகிய ஆதிசேஷன். வெருவி அஞ்சி. பிறவிப் பிறப்பாகிய கடல். உயிர்களின் கணக்கற்ற பிறப்பு களுக்குக் கடல் உவமை. ஆணவத்து ஆழ்ச்சி ஆணவமலத்தின் ஆழம். அகழ்வலம் - பல முள்ள அகழி. தொட்டு - தோண்டி. உரம் - பலம். மதிற்கணம் - மதில்களின் கூட்டத்தை. விடயம் - விஷயம், அதாவது ஐம்புலன்களின் விஷயம். எட்டி - போய்ப் பிடித்து. புலன்களின் - ஐம்புலன்களைப்போல. யந்திரப் படை - இயந்திரப் பொறி முதலிய போர்க் கருவிகள்.

65 முதல் 72 வரிகளில் கோட்டைக்கும் மனித உடம்பிற்கும் உவமை கூறப்படுகிறது. கோட்டையைச் சூழ்ந்துள்ள அகழி பிறவிக்கடல் போல அகலமும், உயிர்களின் ஆணவமலம் போன்று ஆழமும் உடையது; கோட்டைமதில்கள் உயிர்களின் அஞ்ஞானம் போன்று பலமுடையன ; மதில்சுவர்களின் மேல் வைக்கப்பட்டுள்ள போர்க் கருவிகள் ஐம்புலன்களைப்போல் அஞ்சத்தக்கன என்ற சைவ சித்தாந்த தத்துவங்கள் பொருத்திக் கூறப்படுகின்றன.