பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

பச்சாத் தாபப் படுத்துவம்; நிச்சயம். நண்ணிய நமது கனாவின்

எண்ண மேகினும் ஏகும் இனியே.

(புருடோத்தமன் போக)

141

(காவற் படைஞரும், சேவகர்களும் அருள்வரதனைச் சுற்றி நிற்க.)

(நிலைமண்டில ஆசிரியப்பா)

அருள்:

தீர்ந்தது சூரரே! நுந்தோள் தினவு;

165 நேர்ந்தது வெம்போர்.

யாவரும்:

வாழ்கநம் வேந்தே!

முதற் படைஞன்:

யாவ:

நொந்தோம்; நொந்தோ மிதுகா றுறங்கி.

உய்ந்தோம்; உய்ந்தோம்; வாழுக உன்சொல்!

2-ம் படை: பெரும்போர் இலாநாள் பிறவா நாளே.

3-ம் படை:

4-ம் படை:

அருள்:

யாவ:

அருள்:

யாவ:

3-ம் படை:

முதற் படை:

மெய்யோ? பொய்யோ? ஐய! இதுவும்

170 யாவரோ, பகைவர்? அருளா பரணா! தேவரோ, அசுரரோ, மூவரோ, யாவர்?

பாண்டியன்.

(இகழ்ச்சியாய்)

பாண்டியன்! சீச்சீ! பகடி.

ஈண்டுவந் தவனவன் தூதன். யதார்த்தம்.... வியப்பு! வியப்பு!

வேற்றா ளொருவனென்

175 அயற்புறம் போனான். அவன்முகம் நோக்குழி வியர்த்தனன்; தூதுடை கண்டு விடுத்தேன். அவன்றான்! அவன்றான்! அவன்றான்! தூதன்.

4-ம் படை: யாதோ காரணம்? ஓதாய், தலைவா!

2-ம் படை: அப்பந் தின்னவோ? அலால்குழி எண்ணவோ?

பச்சாத்தாபம் - பரிதாபம். உய்ந்தோம் - பிழைத்தோம். மூவர் - மும் மூர்த்திகள். பகடி - கேலி. யதார்த்தம் - உள்ளபடி, மலையாள நாட்டு வழக்கு.