பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

அருள்:

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -20

180 செப்பிய துனக்கு? நமக்கேன்? சீச்சீ!

நல்லது வீரரே! நாளை வைகறை

நெல்லையை வளைந்து நெடும்போர் குறித்துச்

செல்லற் குரியன திட்டம் செய்வான்

வல்லையில் ஏகுதும். மங்கலம் உமக்கே.

அருள்வரதன் முதலியோர் போக)

இரண்டாம் அங்கம்: மூன்றாம் களம் முற்றிற்று.

(கலித்துறை)

அடைய மனோன்மணி அம்மையுஞ் சேரனும் ஆசைகொள்ள இடையில் நிகழ்ந்த கனாத்திற வைபவம் என்னையென்க! உடலு ளுலண்டென வேயுழல் கின்ற வுயிர்களன்புந் தடையில் கருணையுஞ் சந்தித்தல் எங்ஙனஞ் சாற்றுதுமே. இரண்டாம் அங்கம் முற்றிற்று.

ஆசிரியப்பா

ஆசிரியத் தாழிசை

22 -க்கு 3 -க்கு அடி

அடி

708

12

வெண்பா

ஆக, அங்கம்1-க்கு: பா.

1 -க்கு 26 -க்கு அடி

அடி

4

724

அப்பம் தின்னவோ அலால்குழி எண்ணவோ என்பது, "அப்பம் தின்னால் போரெ குழி எண்ணுன்னெந் தின்னு” என்னும் மலையாளப் பழமொழியைக் கூறுகிறது. இந்தப் பழமொழியை “அப்பம் தின்னால் மதி, குத்தெண்ணெண்டா” என்றும் கூறுவர். கலித்துறை : உலண்டு - உலண்டு என்னும் பூச்சி. உழல்கின்ற - பிறப்புகளில் சுழல் கின்ற. சாற்றுதும் - சொல்லுவோம். மனோன்மணியின் காதல் அன்பு சுத்த ஆத்துமாவின் ஞானமாகவும், புருஷோத்தமன் அவளிடம் கொண்ட அன்பு கடவுளின் திருவருளாகவும் கூறப்படுகிறது. ஞானம் பெற்ற ஆன்மாவிடத்தில் ஈசுவரனின் கருணை படிகிறது. என்னும் தத்துவம் இங்கு ஒப்பிடப்படுகிறது.