பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் அங்கத்தின் விளக்கம்

முதற் களம்

66

அரண்மனை மண்டபத்தில் காலை வேளையில் பாண்டியன் அமைச்சனுடன் உரையாடிக்கொண்டிருக்கிறான். "அமைச்சரே! தூதுபோன உமது மகன் கல்வியும் அறிவும் உடையவன். அவனுக்கு அபாயம் வரும் என்று ஐயுற வேண்டாம்” என்றான் அரசன். அதற்கு அமைச்சன், பலதேவனால் காரியம் கெடும் என்று நான் ஐயுறவில்லை. உலக இயற்கை அறியாத சிறுவனானாலும் முயற்சியிலும் அறிவிலும் முதிர்ந்தவன் என்று கூறுகிறார்கள். ஆனால், வஞ்சி நாட்டார் வஞ்சனைக்கு அஞ்சாதவர். 'மிஞ்சினால் கெஞ்சுவர், கெஞ்சினால் மிஞ்சுவர்' என்னும் பழமொழி அவர்களுக்கே தகும். அதனால்தான் என் மனம் மருள்கிறது. மேலும், சேர வேந்தன் இயற்கையில் கடுஞ்சினம் உடையவன் என்று கூறுகிறார்கள்” என்று கூறினான். “சேரன் சினமுள்ள வனானாலென்ன? தேவர்களும் விரும்புகிற நமது மனோன்மணி, இலக்குமி போன்ற அழகும், அன்பு நிறைந்த மனமும், தெளிவான அறிவும் உள்ளவள் என்று முன்னமே முனிவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறான். அவனிடம் திருமணம் பற்றிக் குறிப்பாகக் கூறினால், கரையை யுடைத்து ஓடுகிற வெள்ளம்போல அடங்கா மகிழ்ச்சியுடன் இங்கு ஓடி வருவான். உமக்கு மனக்கவலை வேண்டாம்” என்றான் அரசன்.

66

அதற்கு அமைச்சன் கூறுகிறான்: முனிவர்கள் குமாரியின் அழகைக் கூறியிருப்பார்கள் என்று நினைப்பதற்கில்லை. துறவிகள் பெண்களின் அழகைப் பேசமாட்டார்கள். கல்விப் புலமையும் தெளிந்த மனமும் உடையவர்கள்தான் கூற முடியும். இப்போது தூதுவன் மூலமாகப் புருடோத்தமன் குமாரியின் அழகு இயல்பு முதலியவற்றை எல்லாம் அறிந்திருப்பான். அம்மா! பலதேவன் தன்னந் தனியே அரச குமாரியைப்பற்றிப் பெருமையாகப் புகழ்ந்து பேசியதைக் கேட்டிருக் கிறேன். அவன் குமாரியின் அவயவங்களின் அழகைப் புகழ்ந்து பேசி, 'இக் குமாரிக்குப் பணிவிடை செய்ய தேவர்களுக்கும் வாய்க்காது. அவள் அருகில் இருந்து பணிவிடை செய்யப்பெற்றது எனது பாக்கியம். என் றென்றும் இப்படியே பணிவிடை செய்து கொண்டிருந்து உயிர்