பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

149

கண்டு வியப்படைந்து கூறுகிறான்: “அது என்ன? புகையா, மேகமா? மேகத்தின் நிறம் இப்படி இராது. பொதிகை மலைமேல் எழும்பி வருகிற சூரிய ஒளியையும் மறைத்துவிடுகிற இந்தப் புழுதிப் புகை என்ன? அதோ தோன்றுவன கொடிச்சீலைகள். இடியோசை போலக் கேட்பது தேர்களின் ஓசை. ஓ! படை வருகிறது. வருகிறவன் யார்? வருகிற திசையைப் பார்த்தால் சேரன்போலத் தெரிகிறது. சீச்சீ! போருக்கல்ல அவன் வருவது! திருமணம் செய்ய வருகிறான். போலும். ஓகோ! இது என்ன பாட்டு போர்ப்பாட்டாக இருக்கிறதே!" இவ்வாறு இவன் சிந்திக்கும்போது சேரனின் படைகள் அணிவகுத்துச் செல்வதைக் கண்டான். சேனைகளுடன் செல்லும் பாணர்கள் வீரச் சுவையுள்ள போர்ப் பாடல்களைப் பாடுகிறார்கள். இடையிடையே "ஜே! ஜே ! என்னும் கூச்சல் வானத்தில் பிளந்து செல்கின்றன.

இவற்றையெல்லாம் கண்டும் கேட்டும் வியப்படைந்த நடராஜன் தனக்குள் கூறுகிறான்: சேனைகளின் ஆரவாரமும், மிடுக்கும், போர்க் களப் பாட்டும், தலையில் சூடியுள்ள வஞ்சிப்பூ மாலையும் போர்க் குறிப்பைக் காட்டுகின்றனவேயல்லாமல், திருமணக் குறிப்பைக் காட்ட வில்லையே. என்ன நேரிடுமோ! தரைப்படைகளும், யானைப்படைகளும், தேர்ப்படைகளும் திருநெல்வேலியை நோக்கி வருகின்றன. ஐயோ! மனோன்மணியின் திருமணக் கோலமா இது! இவ்வாறு நடராஜன் எண்ணிக் கொண்டிருக்கும்போது இரண்டு உழவர்கள் அங்கு வந்தார்கள். வந்தவர்கள் நடராஜனைப் பார்த்து, “என்ன சாமி! ஆச்சரியப்பட்டுக் கொண்டு நிற்கிறீர்கள்!" என்று கேட்டனர்.

"படைவந்ததைப் பார்த்தீர்களா?" என்று கேட்டான் நடராஜன். "பார்த்தோம்! போருக்கு அழைத்தால், யார் வரமாட்டார்கள்?" என்றான் ஒரு உழவன்.

66

'திருமணத்துக்காக அல்லவோ தூது போயிற்று?” என்று கேட்டான் நடராஜன்.

"மணப்பேச்சு பிணப்பேச்சாயிற்று. குடிலன் தொட்டால் பொன்னும் கரியாகுமே” என்றான் மற்றொரு உழவன்.

66

‘என்ன செய்தி?” என்று கேட்டான் நடராஜன்.

அதற்கு முதல் உழவன், “அது எங்களுக்குத் தெரியாது. குடிலன் கொடியவன். பாண்டியனுடைய நாட்டைப் பிடுங்கிக் கொள்ளவும்,