பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

151

பிறகு, இரண்டாவது உழவன் கூறினான்: "தூதுக்குழுவுடன் போன இரும்படி இராமன், போகிற வழியில் என் தங்கை வீட்டுக்கு வந்தான். அப்போது நான் அங்கு இருந்தேன். அரண்மனைச் செய்தி என்ன என்று கேட்டேன். அரசர் தத்தெடுக்கப் போகிறார் என்றான். யாரை எப்போது என்று கேட்டேன். அவன் பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டே போய்விட்டான்.

முதல் உழவன், "இந்த இரும்படி இராமன், பலதேவனுக்கு நண்பன்” என்றான்.

இரண்டாவது உழவன், உ ஆள்வது மேலானது" என்றான்.

66

66

குடிலன் ஆள்வதைவிட சேரன்

'அது நமக்கு இழிவு. மேலும் மனோன்மணி அம்மைக்குத் துன்பம் உண்டானால் அதை யாரும் பொறுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள்” என்றான் முதல் உழவன்.

இரண்டாம் உழவன், “தந்தை செய்த வினை அவன் மக்களைச் சேரும் என்பார்கள். வாணியின் வயிற்றெரிச்சல் பாண்டியனை விடுமா என்றான்.

முதல் உழவன், “விதி என்று சொல்லிக் கடமை செய்யாமல் விடுவது மடமை. போர் வந்தால் நாட்டுக்காகப் போர்செய்வதே கடமை” என்றான்.

66

وو

‘அரசன் சரியாக இருந்தால் நீ சொல்வது சரி, சாமி. நீங்களே சொல்லுங்கள். வாணியைத் தங்களுக்குத் தெரியாது போலிருக்கிறது... என்று நடராஜனைக் கேட்டான். நடராஜன், “தெரியும், தெரியும். நீங்கள் போங்கள்” என்று சொல்லி அவர்களை அனுப்பிவிட்டான்.

பிறகு தனக்குள் கூறிக்கொண்டான்: “பாமர மக்கள் தங்கள் மனம் போனபடி பேசுகிறார்கள். சூழ்ச்சியாக யூகிப்பதும், அனுமானிக்கும் அளவும், முன்பின் காட்டிக் காரண காரியங்களைப் பொருத்திக் கூறுவதும் கேட்க மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறது. ஆனால், அவர்கள் சொல்வது முழுவதும் தவறல்ல. அரசியல் இரகசியம் அங்காடி அம்பலம் என்னும் பழமொழி சரியாகத்தான் இருக்கிறது. மண் குடத்தில் இருக்கிற நீர் கசிந்து கசிந்து வெளிப்படுவதுபோல, அரசர் அமைச்சர் முதலியவர்களின் மனத்தில் உள்ள இரகசியங்கள் அவர்களின் கண் முகம் நடை மொழி முதலியவற்றின் மூலமாக வெளிப்