பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

படுகின்றன. பக்கத்தில் உள்ளவர் அவற்றை அறிந்து அவைகளுடன் தமது கருத்தையும் கலந்து வெளியே தூற்றுகிறார்கள். ஆனால், இவர்கள் கூறியவையெல்லாம் குடிலனுடைய குணங்களுடன் பொருத்தமாக இருக்கின்றன. இந்தச் செய்தியையும் படைவந்த செய்தியையும் முனிவருக்குக் கூறுவோம்” என்று எண்ணிக்கொண்டு போகிறான்.

மூன்றாம் களம்

அரண்மனையிலே கன்னிமாடத்திலே நிலா முற்றத்தில் குமாரி மனோன்மணி உலவுகிறாள். நடு இரவு. வாணியும் அருகில் இருக்கிறாள். அறையில் படுத்திருக்கும் செவிலி, “ஏனம்மா, நடு இரவில் எழுந்து உலவுகிறாய்? கண்விழித்தால் உடம்பு சூடுகொள்ளும். படுத்து உறங்கு” என்றாள். “எனக்கு உடம்பு வியர்க்கிறது; இங்கேயே இருக்கிறேன். நீ தூங்கு" என்று மனோன்மணி சொல்லி, “வாணி! உனக்கும் தூக்கம் பிடிக்கவில்லையோ” என்று கேட்டாள்.

“கண்விழித்து எனக்குப் பழக்கம்” என்றாள் வாணி.

"அன்றிற் பறவைகள் ஏன் இப்படி இறைகின்றன! முனிவர் அறையில் ஓசை கேட்கிறது, நாள்தோறும் நிலத்தைத் தோண்டுகிறது போல சந்தடி கேட்கிறது. இன்று ஊரிலும் சந்தடியாக இருந்தது. என்ன காரணம்?” என்று மனோன்மணி கேட்டாள்.

வாணி, சேரன் படையெடுத்து வந்த செய்தியைச் சொல்லாமல், உரையாடலை வேறுபக்கமாகத் திருப்புகிறாள்.

66

“தாங்கள் கண்டது கனவுதானா?” என்று கேட்டாள்.

66

"நான் கண்டது கனவும் அல்ல, நனவும் அல்ல” என்றாள் மனோன்மணி.

“அவரைக் கண்ணால் கண்டதில்லையோ?”

“இல்லை. ஆனால் கண்ணிலேதான் இருக்கிறார். நீ ஓவியம் எழுதவல்ல சித்திரலேகையாக இருந்தால் அவரைப் போலப் படம் எழுதிக் காட்டுவாய்.

“இது புதுமை. து

,,

وو