பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

ஆற்றைக் கடந்தும் நடந்தார். வாலிபனும் பின்தொடர்ந்து சென்றான். கடைசியில் அவர் ஒரு வெளியான இடத்திற்கு வந்தார். அங்கு நெருப்பு மட்டும் எரிந்துகொண்டிருந்தது. முனிவர் அருகிலிருந்த விறகுகளை எடுத்து நெருப்பில் போட்டார். இளைஞனைப் பார்த்து, “வழிநடந்த இளைப்பும் பசியின் களைப்பும் அகல நெருப்பருகில் இருந்து இக் காய்கனி கிழங்குகளை அருந்து” என்று கூறி, பழங்களையும் கிழங்கு களையும் அருகில் வைத்தார். தன் நாக்கினால் ஒரு விரல்அளவு தாண்டமாட்டாதவர்கள் மலைகளையும் கடல்களையும் தாண்டி அலைகிறார்கள். என்னே மனிதரின் அறிவு!" என்று கூறி நகைத்தார்.

ஆனால், இளைஞனோ மௌனமாக நின்றான். “உனக்குக்

கூச்சமேன்? நெடுந்தூரம் அலைந்து வருந்தி பசித்திருக்கிறாய். நெருப்பினருகில் சென்று குளிர்காய்ந்து உணவை அருந்து. உன் சோர்வு நீங்கும்" என்றார். வாலிபன் பதுமை போல அசையாமல் நின்றான். முனிவர் இரண்டு மூன்றுமுறை கூறினார். அவன் அசையவில்லை. அப்போது, நெருப்பு கொழுந்துவிட்டெரிந்து வெளிச்சம் தந்தது. முனிவர் அவ்வாலிபன் முகத்தை அவ் வெளிச்சத்தின் உதவியால் ஊன்றிப் பார்த்தார். அவன் கண்களில் நீர் வழிய, தலைகுனித்து நின்றான். முனிவர் கேட்டார்: “வீட்டில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டு இப்படி வந்துவிட்டாயா? உனக்கு என்ன கவலை? உன் மனத்திலிருப்பதைச் சொல்லு. பெரும்பொருளை இழந்தனையா? நண்பர் இகழ்ந்தனரா? நீ காதலித்த பெண் உன்னைக் கைவிட்டனளா? உண்மையைக் கூறு. ஐயோ! இவ்வுலகத்துச் சுகங்கள் எல்லாம் இதோ இந்தத் தீயில் எழுந்து அடங்குகிற நிழல் போன்றவை. நண்பர்களும் உறவினரும் நாடி வருவது, நெய்க்குடத்தை மொய்க்க வரும் எறும்புபோன்றது. காதல் என்பது முயற்கொம்பு. பெண்கள் கபட எண்ணம் உடையவர். இவ்வாறு முனிவர் கூறியதைக் கேட்ட வாலிபன், கனவிலிருந்து விழித்து எழுபவன் போல விழித்து, வெட்கத்துடன் முகம் வெளுத்து நின்றான். பிறகு அவ்வாலிபன் தான் அணிந்த வேஷத்தைக் கலைத்தான். வாலிபசந்நியாசியின் வேஷம் மாறி, அழகான மங்கையொருத்தியின் வடிவமாக மாறினான்.

பெண்ணாக மாறிய அம் மங்கை, முனிவரின் பாதங்களில் தலை வைத்து வணங்கிக் கூறுகிறாள் : “ காவிரிப்பூம்பட்டினத்திலே ஒரு தாய் வயிற்றில் இரண்டு பெண்களும் ஒரு மகனும் ஆக மூவர் பிறந்தார்கள். இரண்டு பெண்களில் ஒருத்திக்கு மக்கட்பேறு இல்லை. மற்றொருத்