பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

159

வந்தால்தானே பூக்கள் கரு தரித்துக் காயாகும்? இக் காரண காரியங்களை அறிவதற்கு நமது சிற்றறிவு போதாது.

“பாரும்; மனோன்மணி தன் ஊழ்வினை காரணமாகத் தன் கண்ணால் காணாத, காதால் கேட்டிராத ஒருவனை எண்ணி மயங்கினாள். அதனால் துன்புறுகிறாள். அவள் கருதிய அந்த ஆள், புருடோத்தமன் என்று குருநாதர் கூறினார். அது எல்லா விதத்திலும் பொருத்தமாக இருக்கிறது. போருக்கு வந்த புருடோத்தமனும் குமாரி மனோன்மணியும் ஒருவரையொருவர் கண்டால் போர் இல்லையாகும். இதை விடுத்து, நமது குருநாதர் சிரமப்பட்டுச் சுருங்கை தோண்டி அமைக்கிறார் என்று என் சிற்றறிவினால் நான் முதலில் நினைத்தேன். பிறகு, காரணத்துக்காகதான் இப்படிச் செய்கிறார் என்று தெரிந்தேன். துன்பங்களைக் கண்டு உளம் கரைந்து ‘தெய்வத்திருவருள் இவரைக் காக்க' என்று இரங்கி வேண்டினால் அதுவே முத்தியும் மோக்ஷமும் ஆகும்” என்று சொல்லிக் கொண்டிருந்தபோது, சுந்தர முனிவரும் நடராஜனும் அங்கு வந்தார்கள். அவர்களைக் கண்டதும் சீடர்கள் இருவரும் எழுந்து நின்று வணங்கினார்கள்.

ஒரு

சுந்தரமுனிவர் நடராஜனைப் பார்த்துக் கூறுகிறார்: “உமது அருளினால் சுருங்கை இன்று முடிந்தது. நீர் இல்லாவிட்டால் இந்த வேலை இவ்வளவு விரைவாக முடிந்திராது. இதற்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்!”

நடராஜன்: “நன்றாயிருக்கிறது தங்கள் முகமன் பேச்சு. இதென்ன வேடிக்கை! தங்கள் ஏவல்படி செய்வது அல்லாமல் என்னால் ஆவது என்னயிருக்கிறது” என்றான். முனிவர், கருணாகரரைப் பார்த்து, “ நீர் உறங்கி எத்தனை நாளாயிற்று! ஏன் உறங்கவில்லை? எத்தனைநாள் வருந்தி உழைத்தீர்!” என்று கேட்டார். கருணாகரர், “அடியேனுக்கு அலுப்பு என்ன? இங்கு வந்தபோது நிஷ்டாபரர் நிட்டையிலிருந்து கண் விழித்தார். இருவரும் ஏதோ பேசிக்கொண்டிருந்தோம். இதோ விடியற் காலமாய் விட்டது” என்றார். “உங்கள் பேச்சை நாம் அறிவோம். ஓயாத பேச்சு, என்றும் முடியாத பேச்சு, உங்களுக்குச் சமயச் சச்சரவு வேண்டாம். அவரவர்கள் நிலையிலேயே அவரவர்கள் இருக்கலாம் என்று கூறினார். பிறகு எல்லோரும் சென்றனர்.