பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

ஜீவ:

குடி:

20

25

30

35

40

45

66

சினத்தோன் ஆயினென்? தேவரும் தத்தம் மனத்தே அவாவி மயங்குநம் மனோன்மணி திருவும் வெருவும் உருவும், பெருகும்

அருளுறை யகமும். மருளறு முணர்வும், முன்னமே இருடிகள் மொழியக் கேட்டுளன். அன்னவன் தன்னிடைப் பின்னரும் பெயர்த்துக் குறிப்பால் நமது கொள்கை யுணர்த்தில்

161

செறித்திடும் சிறையினை யுடைத்திடும் புனல்போல்

தாங்கா மகிழ்ச்சியுள் தாழ்ந்தவன் இப்பால் தலையா லோடி வருவன். உனக்கு மலைவேன் மந்திரக் குடிலேந் திரனே! முனிவர்க ளாங்கே முன்னர் மொழிந்தனர் எனநாம் நினைப்பதற் கில்லை. நம் அமுதின் எழிலெலாம் எங்ஙனம் முனிவோர் மொழிவர்? துறந்தார்க் கவைதாம் தோற்றுமோ மறந்தும்? சிறந்த நூல் உணர்வும் தெளிந்ததோர் உளமும் செப்பினர் என்றிடில் ஒப்பலாந் தகைத்தே. ஆயினும், மலையநாட் டரசன் நமது

தாயின் தன்மை சகலமும் இப்போது

அறியா தொழியான்; அயிர்ப்பொன் றில்லை. நெறிமுறை சிறிதும் பிறழா நினது

தூதுவன் யாவும் ஓதுவன் திண்ணம். அம்ம! தனியே அவன்பல பொழுதும்

மம்மர் உழன்றவன் போன்று மனோன்மணி அவயவத் தழகெலா மாறா தறைந்தறைந்து, 'இமையவர் தமக்கும் இசையுமோ இவளது பணிவிடை? நமது பாக்கிய மன்றோ அணிதாய் இருந்திவட் காம்பணி யாற்றுதும்? என்றுமிப் படியே இவள் பணி விடையில் நின்றுநம் உயிர்விடில் அன்றோ நன்றாம்? என்றவன் பலமுறை யியல்பல்கேட் டுளனே.

-

திருவும் வெருவும் உரு இலக்குமியும் அஞ்சுகிற அழகு. மருள் அறு - மயக்கம் இல்லாத. செறித்திடும் அடக்கும். சிறையினை கரையை. புனல் - நீர். மலைவு - கலக்கம். மலையநாடு - சேர நாடு. அயிர்ப்பு ஐயம். மம்மர் உழன்றவன் - மயக்கத்தினால் வருந்தினவன். அறைந்து - சொல்லி.