பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

ஒற்றன்:

ஜீவ:

ஒற்:

குடி:

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -20

மங்கலம்! மங்கலம்! மதிகுல மன்னவா! 110 எங்குளார் நமது தூதுவர்!

இதோ! இம்

மாலையில் வருவர். வாய்ந்தவை முற்றுமிவ் ஓலையில் விளங்கும்; ஒன்னல ரேறே!

(ஒற்றன் போக, ஜீவகன் ஓலை வாசிக்க)

(தனதுள்)

ஜீவ:

குடி:

ஒற்றன் முகக்குறி ஓரிலெம் எண்ணம் முற்றும் முடிந்ததற் கற்றமொன் றில்லை.

115 போரும் வந்தது. நேரும் புரவலற்

கிறுதியும் எமக்குநல் லுறுதியும் நேர்ந்தன. (தனதுள்)

துட்டன்! கெட்டான்! விட்டநந் தூதனை

ஏசினான்; இகழ்ந்தான் பேசிய வதுவையும்

அடியில்நம் முடிவைத் தவனா ணையிற்கீழ்ப் 120 படியில் விடுவனாம்; படைகொடு வருவனாம்;

முடிபறித் திடுவனாம். முடிபறித் திடுவன்! (குடிலனை நோக்கி)

குடிலா! உனைப்போற் கூரிய மதியோர் கிடையார். கிடையார். அடையவும் நோக்காய். கடையவன் விடுத்த விடையதி வியப்பே!

(குடிலன் ஓலை நோக்க)

125 நண்ணலர் கூற்றே! எண்ணுதற் கென்னே! உண்ணவா என்றியாம் உறவுபா ராட்டிற் குத்தவா எனும்உன் மத்தனன் றேயிவன்! யுத்தந் தனக்கெள் எத்தனை யேனும் வெருவினோம் அல்லோம். திருவினுஞ் சீரிய

வாய்ந்தவை - நிகழ்ந்தவை. ஓரில் - ஆராய்ந்தால். நண்ணலர் பகைவர். கூற்று - இயமன். உன்மத்தன் - பைத்தியக்காரன்.