பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -20

10 இயக்குதற் கின்பம் பயக்குமோர் இலக்கு

வேண்டும். உயிர்க்கது தூண்டுகோல் போலாம். ஈண்டெப் பொருள் தான் இலக்கற் றிருப்பது? இதோ ஓ! இக்கரை முளைத்தஇச் சிறுபுல் சதாதன் குறிப்பொடு சாருதல் காண்டி. 15 அதன்சிறு பூக்குலை யடியொன் றுயர்த்தி இதமுறத் தேன்றுளி தாங்கி ஈக்களை நலமுற அழைத்து நல்லூண் அருத்திப் பலமுறத் தனதுபூம் பராகம் பரப்பித்து ஆசிலாச் சிறுகா யாக்கி, இதோ! என் 20 தூசிடைச் சிக்கும் தோட்டியும் கொடுத்தே, இவ்வயின் யாமெலாம் செவ்விதில் துன்னில் தழைப்பதற் கிடமிலை. சிறார்நீர் பிழைப்பதற்கு ஏகுமின். புள்ஆ எருதுஅயத் தொருசார் சிக்கிநீர் சென்மின்!' எனத்தன் சிறுவரைப் 25 புக்கவிட் டிருக்குமிப் புல்லின் பரிவும்

பொறுமையும் புலனுங் காண்போர்; ஒன்றையும் சிறுமையாச் சிந்தனை செயாதுஆங் காங்கு

இலக்கு - குறி, இலட்சியம். காண்டி - காண்க. பூம்பராகம் - பூவில் உள்ள மகரந்தப்பொடி. பரப்பித்து - பரப்பி. ஆசுஇலா - குற்றம் இல்லாத. தூசு - ஆடை, உடை. தோட்டி - துறட்டி. துன்னில் - நெருங்கியிருந்தால். சிறார் - சிறுவர். புள் சிறுவர். புள் - பறவை. ஆ - பசு. அயம் (அஜம்) - ஆ அயம் (ஹயம்) - குதிரை. சிக்கி - சிக்கிக்கொண்டு.

ஆடு.

13 முதல் 25 வரிகள், செடிகளின் இயற்கை விசித்திரத்தைக் கூறுகின்றன. செடிகள் தமது பூக்களில் உள்ள தேனைப் பருகத் தேனீ முதலிய பூச்சிகளை வரச் செய்து அவற்றின் மூலமாகப் பூந்தாதுகளைக் கருப்பையிற் சேர்ப்பித்துக் காய்காய்த்து விதை யுண்டாக்கி, அக் காய்களின்மேல் உள்ள சுணையினால் ஆடு மாடு மனிதர் பறவைகள் முதலியவர் மூலமாக வெவ்வேறிடங்களில் சென்று வளரச் செய்கிற தாவரங்களின் இயற்கை விசித்திரம் கூறப்படுகிறது.