பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

90

95

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -20

உள்ளமும் உடலும் பெற்றுங், கள்வர்... நினைக்கலை, தீயனை நினைப்பதுந் தீதே! சினக்கனல் எழும்பும். நமக்கேன் இச்சினம்? கிருபணன். தீனன். விடுவிடு. அஃதென்? என்கொல் அத்தோற்றம்? புகையோ?-மங்குலுக்கு இந்நிற மில்லை. செந்நிறப் படாமென, பொதியில்நன் முகடாம் பொற்புறு கருவிற் கதிமிகு தினமெனும் பொன்வினைக் கம்மியன் உருக்கி விடுதற் குயர்த்திய ஆடகப்

பெருக்கென விளங்கிய அருக்கன தொளியைப் பொருக்கெனப் புதைத்தவிப் புழுதி யென்னே? 100 இதோ! துவண்டங் கிடையிடைத் தோற்றுவ பதாகையின் தொகுதி யன்றோ பார்க்கின்? இடியுருண் டதுபோல எழுமொலி தேரொலி! அடுபடை கொண்டிங் கடைந்தவன் யாவன்? வருதிசை நோக்கில் வஞ்சிய னேயாம்... 105 பொருதற் கன்றவன் வருவது. சரிசரி வதுவைக் கமைந்து வந்தான் போலும். இதுவென்? ஓகோ? மணப்பாட் டன்றிது.

(வஞ்சிநாட்டுச் சேனை அணிவகுத்து வழியில் ஒருபுறம் போகப் படைப்பாணர் பாட)

-

கிருபணன் - உலோபி. தீனம் - எளியவன், ஏழை. தோற்றம் - காட்சி. படாம் – துணி. பொதியில் -பொதிகைமலை. முகடு - உச்சி. பொற் புறு - அழகுள்ள. கரு - உருவங்களை அமைக்கும் வார்ப்பட அச்சு (Mould). ஆடகப் பெருக்கு - உருக்கிய பொன். அருக்கன் - சூரியன். 95 முதல் 98 வரிகளின் கருத்து: பொதிகைமலையின்மேல் சூரியன் புறப்படுகிற காட்சி, நாள் ஆகிய கம்மியன் (சூரிய வெளிச்சமாகிய) உருக்கிய பொன்னை (பொதிகை மலையாகிய) அச்சில் (மூசையில்) ஊற்றுவதுபோலத் தோன்றுகிறது என்பது.

பதாகை - கொடி. தொகுதி - கூட்டம். அடுபடை கொல்லும் சேனை.