பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

2-வது உழ:

நட:

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

நாட்டில் போர்வரின் நன்குபா ராட்டி

195 எஞ்சா வெஞ்சமர் இயற்றலே தகுதி,

அரசன், அரசனேற் சரியே; சுவாமீ! உரையீர் நீரே திருவார் வாணியை அறியீர் போலும்

அறிவோம் அறிவோம்!

நல்ல தப்புறம் செல்லுமின் நீவிர் ...

(தனதுள்)

(உழவர் போக)

200 ஏழைகள்! தங்கள் ஆழமில் கருத்தில் தோற்றுவ தனைத்தும் சாற்றுவர், அவர்தம் தேற்றமில் மாற்றம், சிறுமியர் மழலைபோல், சுகம்தரு மொழிபோல், சுகந்தரும். சூழ்ச்சியும் அனுமா னிக்கும் அளவையும் முனும்பினும் 205 கூட்டிக் காரண காரியக் கொள்கைகள் காட்டலும், காணக் களிப்பே! ஆயினும் பழுதல பகர்ந்தவை முழுதும். முன்னோர் ஜனமொழி தெய்வ மொழியெனச் செப்புவர். அரசியல் இரகசியம் அங்காடி யம்பலம் 210 வரும்வித மிதுவே! மட்குடத் துளநீர் புரைவழி கசிந்து புறம்வருந் தன்மைபோல், அரசர் அமைச்சர் ஆதியர் தங்கள்

சாற்றுவர் - சொல்லுவார்கள். தேற்றம் - தெளிவு. மாற்றம் - சொல், பேச்சு. அனுமானித்தல் கருதல் அளவை; காரியத்தைக் கண்டு காரணத்தையுணர்தல். அளவை - பிரமாணம், தன்மை. அங்காடி கடைத்தெரு. அம்பலம் – பலரும் கூடும் இடம்.

209-ஆம் வரி. ‘அரண்மனை இரகசியம் அங்காடி பரசியம்' என்னும் மலையாள நாட்டுப் பழமொழியைக் குறிக்கின்றது.

-