பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

181

வா:

மனோ:

வா:

மனோ:

வா:

மனோ:

வா:

மனோ:

வா:

15

20

மனோ : 25

வா:

மனோ:

நடுநிசி அம்மா!

இத்தனை யரவமேன்? முனிவ ரறையில் நித்தமு முண்டிது! நிதியெடுப் பவர்போல்

தோண்டலு மண்ணினைக் கீண்டலும் கேட்டுளேன். ஊரிலேன் இன்றிவ் உற்சவ அரவம்?

(தனதுள்)

போரெனிற் பொறுப்பளோ? உரைப்பனோ? ஒளிப்பனோ? கண்டதோ நகருங் காணாக் கனவு?

கண்டது கனவோ தாயே?

கண்டது...

கனவெனிற் கனவு மன்று: மற்று

நனவெனில் நனவு மன்று.

நன்றே!

கண்ணாற் கண்டிலை போலும்! அம்ம!

கண்ணால் எங்ஙனங் காணுவன்? கண்ணுளார்!

எண்ணம் மாத்திரமோ? இதுவென் புதுமை!

எண்ணவும் படாஅர்! எண்ணுளும் உளாஅர்! புதுமை! ஆயினும் எதுபோ லவ்வுரு?

இதுவென வொண்ணா உவமையி லொருவரை எத்திற மென்றியான் இயம்ப! நீயுஞ்

சித்திர ரேகை யலையே. விடுவிடு!

அரவம்

ஓசை. நிதியெடுப்பவர்போல் புதையல் தோண்டி எடுப்பவர் போல.

13 - 15 வரிகள், அரண்மனையிலிருந்து ஆசிரமம் வரையில் முனிவர் சுரங்கம் தோண்டுவதால் உண்டாகும் அரவத்தைக் குறிக்கின்றன.

19 வரி. கண்டது கனவோ? - நீ காதல் கொள்ளக் காரணமாயிருந்தது கனவுக் காட்சியோ?

கண்ணுளார்

கண்ணிலே தங்கி யிருக்கிறார். சித்திர ரேகை சித்திரலேகை. இவள், வாணாசுரன் மகளாகிய உஷை என்பவளின் தோழி. மனிதர் உருவத்தைச் சித்திரமாக