பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

வா:

மனோ:

30

35

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

பண்ணியல் வாணீ! வாவா! உன்றன்

பாட்டது கேட்டுப் பலநா ளாயின! என்பா டிருக்க! யாவரு மறிவார்! உன்பா டதுவே ஒருவரு மறியார். பாக்கிய சாலிநீ! பழகியும் உளையே! நீக்குக இத்தீ நினைவு! யாழுடன் தேக்கிய இசையிற் செப்பொரு சரிதம்

(வாணி வீணைமீட்ட)

அவ்விசை யேசரி ஒவ்வுமித் தருணம்!

(வாணி பாட)

66

சிவகாமி சரிதம்

(குறள்வெண்செந்துறை)

"வாழியநின் மலரடிகள்! மௌனதவ முனிவ!

மனமிரங்கி அருள்புரிந்தோர் வார்த்தையெனக் கீயில் பாழடவி இதிற்சுழன்று பாதைவிடுத் தலையும்

பாவியொரு வனையளித்த பலனுறுவை பெரிதே.

1

வரைவதில் வல்லவள். உஷை தான் கனவிற் கண்டு காதல் கொண்ட அநிருத்தனை இன்னான் என்று அறியாமல் வருந்திய போது, சித்திரலேகை அவன் உருவத்தை ஓவியமாக எழுதிக் காட்டினாள். அவ் வுருவந்தான் தான் காதலித்தவன் என்று கூற, சித்திரலேகை தன் மாயா ஜாலத்தினால் அநிருத்தனை அவன் உறங்கிய கட்டிலோடு கொண்டுவந்து உஷையினிடம் விட்டாள் என்பது புராணக் கதை. நீ நீ சித்திரலேகை அல்லை என்பது, சித்திரலேகைபோல வாணி ஓவியம் எழுத வல்லவள் அல்லாள்

என்பது

34 வரி. பழகியும் உளையே - வாணி தன் காதலனை நேரில் கண்டு பழகி யிருக்கிறாள் என்பதும், மனோன்மணி தன் காதலனை நேரில் காணாமல் கனவில் மட்டும் கண்டிருக்கிறாள் என்பதும் கருத்து. செய்யுள் 1. அடவி - காடு. பாதை விடுத்து வழி தவறி. அளித்த பாதுகாத்த.

"