பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

185

பொறியரவின் சுடிகையுறு பொலன்மணியி னொளியும்,

பொலிமதத்திண் கறையடியின் புலைமருப்பி னொளியும். அறிவரிய சினஉழுவை அழல்விழியி னொளியும்,

அலதிலையவ் அடவியிடை யயல்காட்டு மொளியே.

பிரிவரிய ஊசிவழி பின்தொடரும் நூல்போல்

பேரயர்வின் மனமிறந்து பின்தொடரும் மைந்தன், அரியபுத ரிடையகற்றி அன்பொடழைத் தேகும்

அம்முனிவ னடியன்றி அயலொன்றும் அறியான்.

ஒருங்கார நிறைமுளரி உழையொதுக்கி நுழைந்தும், உயர்மலையின் குகைகுதித்தும் ஒங்கார ஒலியே தருங்கான நதிபலவுந் தாண்டிஅவ ரடைந்தார்

10

11

சார்பிலர்க்குத் தனித்துணையாந் தவமுனிவ னிடமே. 12

அந்தி மாலைநேரம். ஏவி - போகவிட்டு. அந்தியை முன் ஏவி இரவென்னும் இறைவி வந்திறுத்தனள் மாலை நேரமாகிய தோழியை முன் போகவிட்டு இரவாகிய இராணி அவள் பின்னே வந்தாள்.

செ. 10. பொரியரவு புள்ளிகளையுடைய பாம்பு. சுடிகை - தலை, உச்சி. பொலன்மணி - பொலிவுள்ள மாணிக்க மணி. பாம்புகளின் தலையில் மாணிக்க மணி உண்டென்பது கவிஞர்களின் கற்பனை. ஒளி - வெளிச்சம். திண் - திண்ணிய, பலமுள்ள. கறைபடி - யானை, (உரல்போன்ற காலையுடையது). மருப்பு - தந்தம். உழுவை - புலி. அழல் விழி - நெருப்புப் போன்ற கண்கள்.

செ. 11. பேரயர்வு - அதிகத் தளர்ச்சி, மனம் இறந்து - மனம் கடந்து.

செ. 12. ஒருங்குஆர - ஒன்றாக நெருங்கியுள்ள. முளரி- முட்கள். உழை - பக்கம். ஓங்கார ஒலி தரும் கானநதி - காட்டாறுகளின் நீர்ஒலி ஓங்கார சத்தத்தை உண்டாக்கின.