பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -20

நேயமுட னெவ்வழியும் நேர்ந்தவரைத் தன்நுண்

நிறுவுதலை வளைத்தழைக்கு நெருப்பொன்றும் அன்றி வாயிலெனப் பூட்டென்ன மதிலென்ன வழங்கும்

மனையென்னும் பெயர்க்குரிய மரபொன்று மின்றி. 13

நின்றதனி யிடமிவர்கள் நேர்ந்தவுடன் முனிவன்

நெருப்பின்னும் எழுப்புதற்கு நிமலவிற கடுக்கி ஒன்றியமெய்ப் பத்தரில்தன் உளங்கூசி யொருசார்

ஒதுங்குகின்ற மைந்தனகம் உவப்பஇவை உரைக்கும்: 14

'இனிநடக்க வழியுமிலை; இனித்துயரு மில்லை. இதுவேநம் மிடம்மைந்த! இக்கனலி னருகே பனிபொழியும் வழிநடந்த பனிப்பகல இருந்து

பலமூல மிதுபுசிக்கிற் பறக்குமுன திளைப்பே.

தந்நாவி லொருவிரலைத் தாண்டவறி யாமல்

15

சாகரமும் மலைபலவுந் தாண்டியலை கின்றார்.

என்னேயிம் மனிதர்மதி!" எனநகைத்து முனிவன்

இனியகந்த முதலனந்த இனம்வகுத்தங் கிருந்தான்.

16

செ. 13. முனிவர் நமது இருப்பிடத்தை யடைந்தபோது அங்கே எரிந்துகொண் டிருந்த நெருப்புச் சுடர், தலையைத் தாழ்த்தி வரவேற்றதுபோலிருந்தது.

செ. 14. நிமலம் - நிர்மலம், சுத்தமான மெய்ப்பத்தர் - உண்மையான பக்தர்.

செ. 15. பனிப்பு - குளிர், நடுக்கம். பலம் - பழம். மூலம் - கிழங்கு. செ. 16. நாவில் - நாக்கில். ஒரு விரலைத் தாண்டுதல் - ஒரு விரற் கிடை தூரத்தைக் கடத்தல். நாவினால் குண்டலி சக்தியை எழுப்பி ஒரு விரற்கிடை தூரத்தைக் கடந்து அமுத கலையை உண்ணுவது ஹடயோக முறை. இதனை யோகிகள் செய்வார்கள். சாகரம் - கடல். கந்தம் - கிழங்கு. அனந்தம் – பல.