பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

189

எரியுமுளம் நொந்தடிக ளிசைத்தவசை யுட்கொண்டு

ஏதிலனீள் கனவுவிழித் தெழுந்தவன்போல் விழித்து விரிவெயிலில் விளக்கொளியும் மின்னொளியிற் கண்ணும் வெளிப்பட்ட கள்வனும்போல் வெட்கிமுகம் வெளுத்தான். 25 இசைத்தவசைச் செயலுணர எண்ணிமுகம் நோக்கி

இருந்தயதி யிக்குறிகண் டிறும்பூதுள் ளெய்தி’ விசைத்தியங்கு மெரியெழுப்பி மீண்டுமவன் நோக்க வேஷரக சியங்களெலாம் வெட்டவெளி யான.

நின்மலவி பூதியுள்ளே பொன்மயமெய் தோன்றி

நீறுபடி நெருப்பெனவே நிலவியொளி விரிக்கும். உண்மைதிகழ் குருவிழிக்கு ளுட்கூசி யொடுங்கும்

26

உண்மைபெறு கண்ணினையும் பெண்மையுருத் தெரிக்கும். 27

கூசுமுக நாணமொடு கோணியெழில் வீச

குழற்பாரஞ் சரிந்துசடைக் கோலமஃ தொழிக்கும். வீசுலையில் மூக்கெனவே விம்மியவெய் துயிர்ப்பு

வீங்கவெழு கொங்கைபுனை வேடமுழு தழிக்கும்.

28

முயற்கொம்பு - இல்பொருள் உவமை. பெருங் கபடம் இடும் கலன் - வஞ்சகமாகிய பொருள்களை இட்டு வைக்கும் பாத்திரம். பிறங்கும் - விளங்கும்.

செ. 25. அடிகள் - முனிவர். ஏதிலன் – வறியவன். வெயிலின்முன் விளக்கொளி என்பது பழமொழி. மின்னெளியில் கண்போல - மின்னல் வெளிச்சத்தில் கண் கூசுவதுபோல வெளிப்பட்ட கள்வன் - பிடிபட்ட திருடன்.

செ. 26. யதி துறவி, முனிவர். இறும்பூது – வியப்பு. வேஷ ரகசியங்கள் - மாறுவேடம். வெட்ட வெளியான - வெளிப்பட்டன. செ.27. நின்மல விபூதி - தூய்மையான திருநீறு. பொன் மய மெய்-பொன் நிறமான உடம்பு. நீறுபடி நெருப்பு - நீறியுள்ள சாம்பலுக்குள்ளே இருக்கிற நெருப்பு. கண் இணை - இரண்டு கண்கள். தெரிக்கும் - காட்டும்.

-

செ. 28. எழில் - அழகு. குழல் - கூந்தல். சடைக்கோல மஃது - சடைக் கோலத்தை. வீசு உலையின் மூக்கு என - உலைக்களத்தில் துருத்தி யின் மூக்கிலிருந்து வெளிப்படும் காற்றைப்போல. வெய்துயிர்ப்பு - பெருமூச்சு.