பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

ஆயத்தார் கூடியெனை ஆயவுந்தான் ஒட்டார்.

அகல்வேலை யோஎறியும் அகோராத்திரங் கெடுத்து; தீயைத்தா னேயுமிழுஞ் சிறந்தகலை மதியும்;

திரிந்துலவுங் காலுமுயிர் தின்னுநம னென்ன. கண்டவரைக் கேட்டவரைக் காசினியில் தேடிக்

கண்டிடச்சென் றேயலைந்த கட்டமெனைத் தென்க? உண்டெனத்தம் யூகநெறி உரைப்பவரே அல்லால்

உள்ளபடி கண்டறிந்தோர் ஒருவரையுங் காணேன். உண்டெனிலோ கண்டிடுவன்; இல்லையெனில் ஒல்லை, உயிர்விடுத லேநலமென் றுன்னியுளந் தேறி

கண்துயிலும் இல்லிடந்தீ கதுவவெளி யோடும்

கணக்காஇவ் வேடமொடு கரந்துபுறப் பட்டேன்.

தீர்த்தகுளம் மூர்த்திதலம் பார்த்துடலம் சலித்தேன்.

திருக்கறுபற் குருக்கள்மடம் திரிந்துமனம் அலுத்தேன். வார்த்தைகத்தும் வாதியர்தம் மன்றனைத்தும் வறிய. மறுத்துறங்கும் யோகியர்போய் வாழ்குகையும் பாழே.

-

38

39

40

41

எண்ணிப்

செ. 38. ஆயத்தார் தோழிப் பெண்கள். ஆயவும் பார்க்கவும். அகல் வேலை - பரந்த கடல். எறியும் - அலைவீசும். அகோராத்திரம் பகலும் இரவும். கடல் ஓசை பிரிந்த காதலர் களுக்குத் துன்பம் உண்டாக்கும் என்பது கவிமரபு. கலைமதி –பதினாறு கலைகளையுடைய சந்திரன், நிலா. கால்காற்று, பிரிந்திருக்கும் காதலருக்கு வெண்ணிலாவும், இளங் காற்றும் துன்பம் செய்கிறது என்பது கருத்து.

செ. 39. காசினி - பூமி. கட்டம் - கஷ்டம். எனைத்தென்க - எவ்வளவு என்று சொல்ல.

செ. 40. ஒல்லை - விரைவில். உன்னி - எண்ணி. தீகதுவ – தீ பற்றி எரிய. கரந்து - மறைந்து, ஒளிந்து.

செ. 41. தீர்த்தகுளம் - புண்ணிய நீர்த்துறைகள். மூர்த்தி - மூர்த்தங்கள் உள்ள இடங்கள். தலம் - இடம். இங்குக் கோயில்களைக் குறிக்கிறது. திருக்குஅறு - மயக்கம் நீங்கிய. வாதியர் - சமயவாதம் செய்வோர். மன்று -சபை, அம்பலம். மறுத்து உறங்கும் - உடல் தூக்கத்தை மறுத்து யோக நித்திரை தூங்கும். யோகியர் - யோகம் செய்பவர்.