பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

மனோ:

வா:

மனோ:

ஆழிபுடை சூழுலகம் யாவுநல மேவ!

அறத்துறை புகுந்துயிர்கள் அன்புவெள்ளம் மூழ்க! பாழிலலை வேனுடைய பந்தனைகள் சிந்த

பரிந்தருள் சுரந்தமை நிரந்தரமும் வாழ்க!

40

வா:

மனோ:

45

வா:

(ஆசிரியப்பாவின் தொடர்ச்சி)

வாணி! மங்காய்! பாடிய பாட்டும்,

வீணையின் இசையும் விளங்குநின் குரலும் தேனினும் இனியவாய்ச் சேர்ந்தொரு வழிபடர்ந்து ஊனையும் உயிரையும் உருக்கும். ஆ! ஆ!

(இருவரும் சற்று மௌனமாயிருக்க)

உனதுகா தலனெங் குளனே? உணர்வைகொல்? எனது சிந்தையில் இருந்தனர்: மாறார்.

ஆயினும் வெளியில்?

அறியேன், அம்ம!

போயின இடம்நீ அறியாய்?

நாரணன்

முனிவர் தம்மடத் தேகினர் தனியென

ஓதினன் ஓர்கால்.

மனோ:

ஓகோ! ஓகோ!

(மௌனம்)

195

50

வா:

50

கடைநாள் நிகழ்ந்தவை யென்னை? கழறாய் அடியனேற் கந்நாள் கெடுநாள் மிகவும்! ஒருநாள் அந்தியில் இருவரும் எதிர்ச்சையாக் கடிபுரி கடந்துபோய், நெடுவயற் பாயும் ஒருசிறு வாய்க்காற் கரைகண் டாங்கே, பெருமலை பிறந்த சிறுகாற் செல்வன்

தெண்ணீர்க் கன்னி பண்ணிய நிலாநிழற்

செ. 50. ஆழி - கடல். புடைசூழ் - பக்கங்களிலே சூழ்ந்த. பந்தனைகள் துன்பங்களாகிய கட்டுகள். சிந்த - கெட. நிரந்தரம் - எப்பொழுதும். கழறாய் - சொல்வாய். எதிர்ச்சையா - தற்செயலாய். கடிபுரி - காவல் அமைந்த கோட்டை. பெருமலை - இங்குப் பொதிகைமலையைக் குறிக்கிறது. சிறுகால் செல்வன் - இளங்காற்றாகிய மகன்.