பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

55

60

65

70

75

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -20

சிற்றில் பன்முறை சிதைப்பவன் போன்று சிற்றலை யெழுப்பச் சிறுமி முறுமுறுத்து அழுவது போல விழுமிய பரல்மேல்

ஒழுகும் தீம்புனல் ஓதையும் கேட்டுப்

பழுதிலாப் பால்நிலா விழுவது நோக்கி

இருவரும் மௌனமாய் நெடும்பொழு திருந்தோம்.

கரையிடை அலர்ந்த காவியொன் றடர்த்தென் அருகே கொணர்ந்தெனக் கன்பா யீந்தனர்.

வருவதிங் கறியா மதியிலி அதனைக்

கண்ணிணை ஒற்றிலன்; உள்மணம் உகந்திலன்; மார்பொடு சேர்த்திலன்; வார்குழற் சார்த்திலன்; ஆர்வமும் அன்பும் அறியார் மான

ஓடும் தீம்புனல் மாடே விடுத்துச்

சிறுமியர் குறும்பு காட்டிச் சிரித்தேன். முறுவலோ டவரும் ஏதோ மொழிய

உன்னும் முன்னரென் அன்னையங் கடைந்தாள்; தீமொழி பலவும் செப்பினள். யானோ?

நாவெழில் இன்றி நின்றேன். நண்பர்

மறுமொழி ஒன்றும் வழங்கா தேகினர்.

அதுமுதல் இதுகாறும் அவர்தமை ஐயோ!

கண்டிலேன். இனிமேற் காண்பனோ? அறியேன்.

ஒருமுறை கண்டென் உளக்கருத் தவருடன் உரைத்தபோ தன்றி ஒழியா துயிரே!

நேர்பட அறியா என்றோ நினைத்தாய்?

மனோ:

உரைப்பதென் வாணீ! உளமும் உளமும்

வா:

80

மனோ:

ஓர்வழிப் படரின் உணருமென் றுரைப்பர். ஏனதில் ஐயம்? எனக்கது துணிபே!

தெள்நீர்க் கன்னி - தெளிந்த நீராகிய பெண். சிற்றில்

சிறுவீடு; சிறுமிகள் விளையாட்டாகக் கட்டுவது. காவி - குவளைப்பூ, நீலத் தாமரை. அடர்த்து கொய்து. சார்த்திலன் - சூடவில்லை. மான - ஒக்க, போல. மாடே - இடத்தில்.