பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

வா:

மனோ:

வா:

மனோ:

வா:

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -20

105 தரும்பக் குவமிலார் தமதுளம் போய வழியே வாளா மனக்கணக் கிட்டு மொழிவார் முற்றும் துணிவா யெனயான் இச்சிறு தினத்தின் இயைந்தவை தம்மால் நிச்சயித் துணர்ந்தேன். வாணீ! ஐயோ! 110 நம்பலென் பதுவே அன்பின் நிலைமை! தெளிந்தவை கொண்டு தெளிதற் கரியவை உளந்தனில் நம்பி உறுதியாய்ப் பிடித்துச் சிறிது சிறிதுதன் அறிவினை வளர்த்தே அனுபவ வழியாய் அறிவதை அந்தோ! 115 ‘அனுமா னாதியால் ஆய்ந்தறிந் திடுவோம் அலதெனில் இலையென அயிர்ப்போம்' எனத்திரி வாதியர் அன்பொரு போதுமே அறியார். தாய்முலைப் பாலுள் நஞ்சு ஆய்பவ ரவரே! முற்றுங் களங்கம் அற்றிடில் ஆ! ஆ!

(உடல் புளகாங்கிதமாய் நடுங்க)

120 ஏதோ வாணீ! இப்படி என்னுடல்?...

தமோ? தாயே!

சீ! சீ! இன்றெலாம்

இப்படி அடிக்கடி என்னுடல் நடுங்கும்! இக்குளிர் காற்றின் இடையே இருத்தல் தக்க தன்றினி. தாயே பாராய்!

125 அம்மழை பெய்யும் இம்மெனும் முன்னம். நனைந்திடில் என்னை? கரைந்திடு மோவுடல்? (எழுந்து மேகம் பார்க்க)

(தனதுள்)

ஐயோ! ஏன்நான் அத்திசை காட்டினேன்? பொய்யெப் படியான் புகல்வன்!

ஏய்ப்ப – ஒப்ப, போல. அனுமான ஆதி -அனுமானம் பிரத்தியட்சம் முதலிய அளவைகள். அயிர்ப்போம் - சந்தேகப்படுவோம்.