பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

கருணாகரர்:

துறப்பதிவ் வுலகம் மறப்பதற் கன்றோ! மறக்கிற் சுயமே மறையும். மறைய

70 இறக்கும் நும்முளம். இறக்குமக் கணமே பிறக்கும் பிரத்தியக் பிரபோ தோதயம்! நீரும் உலகமும் நிகழ்த்திய போரும் யாருமங் கில்லை. அகண்டசித் கனமாய் எதிரது கழிந்தபே ரின்பமே திகழும்! உரையுணர் விறந்தவிந் நிருபா திகம்யான் உரைதரல், பிறவிக் குருடற் கொருவன் பால்நிறம் கொக்குப் போலெனப் பகர்ந்த கதையாய் முடியும்! அதனாற் சற்றே

75

80

85

90

பதையா திருந்துநீர் பாரும்

சுதமாம் இவ்வநு பூதியின் சுகமே.

சுகம்யான் வேண்டிலேன் சுவாமி! எனக்குமற் றிகம்பரம் இரண்டும் இலையெனில் ஏகுக. யாரெத் ஒருபொருள் உளதாம் அளவும், ஞான தயாநிதி நங்குரு நாதன்

ஈனனாம் என்னையும் இழுத்தடி சேர்த்த

வானநற் கருணையே வாழ்த்தியிங் கென்னால்

ஆனதோர் சிறுபணி ஆற்றலே எனக்கு

மோனநற் சித்தியும் முத்தியும் யாவும். ஐயோ! உலகெலாம் பொய்யா யினுமென்! பொய்யோ பாரும்! புரையறு குரவன்

பரிந்துநம் தமக்கே சுரந்தவிக் கருணை!

203

1

பிரத்தியக் பிரபோதயம் - உள்முகமான மெய்ஞ்ஞானம். அகண்ட பரந்த. சித்கனம் அறிவுமயம். நிருபாதிகம் காலதேச விவகாரங்களைக் கடந்துநிற்கும் நிலை. 76-78 வரிகள். பாலின் நிறத்தையறியாத பிறவிக் குருடனுக்குப் பாலின் நிறம் கொக்குப் போன்றது என்று சொன்ன கதையைக் குறிக்கிறது. (கதை விளக்கத் திற் காண்க.) சுதமாம் - தானே தெரியும். அநுபூதி - தான் அறிந்ததும் ஆனால் பிறருக்குச் சொல்ல முடியாததுமான அறிவு. மோனம் மௌனம். சித்தி மோட்சம். முத்தி - மோட்சம். புரையறு குற்றமற்ற. குரவன் - குருநாதன்.

மோட்சம். முத்தி

-