பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

596

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -20

இப்பெருந் தன்மைமுன் இங்குமக் கேது? செப்பிய நிட்டையும் சித்தநற் சுத்தியும் எப்படி நீரிங் கெய்தினீர்? எல்லாம் ஒப்பறு நுந்திறம் என்றோ உன்னினீர்? அந்தோ! அந்தோ! அயர்ப்பிது வியப்பே! சுந்தரர் கடைக்கண் தந்திடு முன்னம் பட்டபா டெங்ஙனம் மறந்தீர்? பதைப்பறு நிட்டையா யினுமென்? நிமலவீ டாயினென்?

100 ஆவா! யாம்முன் அல்லும் பகலும்

ஓவாப் பாவமே உஞற்றியெப் போதும் ஒருசாண் வயிறே பெரிதாக் கருதியும், பிறர்புக ழதுவே அறமெனப் பேணியும், மகிழ்கினும் துயருழந் தழுகினும் சினகரம்

105 தொழுகினும் நன்னெறி ஒழுகினும் வழுவினும் எத்தொழில் புரியினும் எத்திசை திரியினும் ‘நாமே உலகின் நடுநா யகம்நம்

66

க்ஷேமமே ஜகசிருட் டியினோர் பெரும்பயன் என்னஇங் கெண்ணி எமக்கெமக் கென்னும் 110 தந்நயம் அன்றிப் பின்நினை வின்றி முடிவிலா ஆசைக் கடலிடைப் பட்டும்; தடைசிறி தடையிற் சகிப்பறு கோபத் தீயிடைத் துடித்தும்; சயஞ்சிறி தடையில் வாய்மண் நிறைய மதக்குழி அதனுள் 115 குதித்துக் குதித்துக் குப்புற விழுந்தும்; பிறர்புகழ் காணப் பெரிதகம் உடைந்தும்; பிறர்பழி காணப் பெரிதக மகிழ்ந்தும்;

சிறியரைக் காணிற் செருக்கியும்; பெரியரைக் காணிற் பொறாமையுட் கலங்கி நாணியும்;

120 எனைத்தென எண்ணுகேன்! நினைக்கினும் உடலம் நடுங்குவ தந்தோ! நம்மை இங்ஙனம்

உஞற்றி - செய்து. சினகரம் - கோயில். இச் சொல் முதலில் ஜைனக் கோவிலுக்குப் பெயராக அமைந்து, பிறகு கோயில் என்னும் பொதுப் பொருளைப் பெற்றது. அகம் உடைந்து – மனம் வருந்தி.