பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காம் அங்கத்தின் விளக்கம்

போர்க்களம்.

முதற் களம்

காலைவேளை குடிலன் மகன் பலதேவன் படைகளை அணிவகுக்கிறான். குடிலன் தனியே ஓரிடத்தில் அரசனை எதிர்பார்த்திருக்கிறான். அரசன் தோல்வியுற்று உயிர் இழக்கவேண்டும் என்பது குடிலனுடைய உள் எண்ணம். ஆகையினாலே, அரசனிடம் உண்மைப் பற்றும் அன்பும் உள்ள நடராஜன் முதலிய வீரர்களைப் போர்க்களத்தில் இருத்தாமல், அவர்களைக் கோட்டைக்குக் காவலாக அமைத்துத் தன் மகனான பலதேவனைத் தளபதியாக்கி யிருக்கிறான். அரசன் வருகையை எதிர்நோக்கி இருக்கும் அமைச்சன்,

தனக்குள்ளே எண்ணிக் கொள்கிறான் :

66

'ஒருத்தன் கொண்ட பேராசையினால் கடல்போன்று துன்பம் உலகத்தில் ஏற்படுகிறது. இதோ இந்தப் போர்க்களத்திலே அணி அணியாக நிற்கும் போர்வீரர்களில் மாண்டு மடியப்போகிறவர்களின் தொகையைக் கணக்கிட முடியுமா? குளத்திலே கல்லைப் போட்டால், அது விழுந்த இடத்தில் வட்டமாக அலைகள் தோன்றிப் பெரிதாகிப் பெரிதாகிக் கரையை வந்து மோதுவதுபோல, வீரர் இறந்தால், அந்தத் துன்பம் மனைவிமக்கள், உற்றார், பெற்றார், நண்பர் முதலியவர்களிடம் பரவிப் பெருந்துயர் உண்டாக்குகிறது ! சீச்சீ ! இதென்ன, எனக்கு ஏன் இந்த எண்ணங்கள்? அரசனுக்காகச் சாகவேண்டியது இவர்கள் கடமை. பல ஆண்டுகளாக அரசனுடைய சோற்றைத் தின்று வருகிற இவர்கள் செய்தது என்ன? செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்கவேண்டும் அல்லவா? மேலும், பலபேர் துன்பப்பட்டால்தான் ஒருவன் சுகம் அடையலாம் என்பது உலக இயற்கை. ஆகவே, இவர்களுக்காக நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? உழுவோர் நெய்வோர் பல்லக்குச் சுமப் போர்கள் முதலியவர் துன்பம் அடைவதனாலே அவ்வவ்வேலைகளை வேண்டாமென்றா சொல்லுவார்கள்? ஒவ்வொருவரும் அவரவர் நன்மைகளையே நாடுகிறார்கள். வாய்க்காலில் மௌனமாக நின்று கொண்டு மீன் வருமளவும் பொறுமையோடு காத்துக்கொண்டிருக்கிற கொக்கைப்போல, அறிவாளிகள் காலம் இடம்வரும்வரையில்