பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

215

சுதந்தரம்' என்று பெருமையுடன் பேசுவார்கள். நீங்கள் அடைவது விழுப்புண் அல்ல; புகழின் கண். போரில் புண்கொள்ளாமல் புகழுடம்பு பெற்றவர் யார்? அத்திப் பழத்தில் கொசுக்கள் உண்டாகிச் சாவது போல, நாள்தோறும் சாகிறவர் பலப் பலர்.அவர்கள் எல்லாம் பிறந்து வாழ்ந்தவர்கள் என்று கருதப்படுவரோ! வீரர்களே ! நீங்கள் இன்று அடையப்போகிற புகழைப்பற்றி நானும் பெருமைப்படுகிறேன். உ உங்களில் போருக்கு அஞ்சி உயிர்விட அஞ்சுவோர் ஒருவரும் இலர். இருந்தால் சொல்லுங்கள், அவர்களைப் பாதுகாப்பான இடத்தில் அனுப்புவோம். (இல்லை, இல்லை. ஒருவரும் இல்லை என்ற குரல்.)

"நல்லது. உரிமைக்காக சுதந்தரத்துக்காக மேன்மைக்காகப் புகழுக்காகப் போராடுவோம் ! வாருங்கள். அதோ, விஜயலட்சுமி காத்திருக்கின்றாள். குமாரி மனோன்மணி உங்கள் வெற்றிக்காக நோன்பு நோற்கிறாள். வெற்றி முரசு கேட்டால்தான் அவள் நோன்பு விடுவாள். (குமாரி மனோன்மணிக்கு ஜே என்னும் குரல்). நமது தாய் தந்தையர் மனைவி மக்கள் நமது நாடு எல்லோருடைய சுதந்தரத்தை யும் அழித்துப் பறிக்க வந்தனர் பகைவர்கள். அவர்களை அடிப்போம்; விரட்டுவோம்; மண்டையை உடைப்போம்; குடலைப் பிடுங்குவோம்; உயிர் குடிப்போம்; வெற்றிபெறுவோம். வாருங்கள்! வாருங்கள்!!”

முரசு கொட்டுகின்றனர். பாணர்கள் போர்ப் பாட்டுப்பாடுகிறார்கள். படை வீரர்கள் சேனைத் தலைவரைப் பின் தொடர்ந்து போர்க்களம் செல்கின்றனர்.

இரண்டாம் களம்

கோட்டையைப் பாதுகாக்கக் கோட்டைவாயிலில் நிறுத்தப்பட்ட வீரர்கள் தமக்குள் பேசிக்கொள்கிறார்கள். இந்த வீரர்கள் அரசனிடம் பேரன்பு கொண்டவர்கள். சாவேறு படையினராகிய இவர்கள் அரசனுக்காக உடலையும் உயிரையும் எந்த நிமிடமும் விடத் தயாராக இருப்பவர். அரசனுக்குத் தீங்கு செய்ய அந்தரங்கத்தில் கருதிக் கொண்டு, வெளிக்கு உண்மையாளனைப்போல நடிக்கும் மந்திரியாகிய குடிலன், இந்தச் சாவேறு வீரர்களை அரசனுடன் போர்க்களத்தில் இருத்தாமல் கோட்டையில் இருக்கச் செய்தான். ஆனால், இவர்கள் எல்லோரும் போர்களத்தில் சென்று போர்செய்யத் துடிக்கின்றனர். கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டியபடியால், ஒன்றும் பேசாமல் கோட்டையில் காவல் இருக்கின்றனர். அவர்கள் கண்ணும்