பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -20

மனமும் போர்க்களத்தை நோக்கி இருக்கின்றன. அவர்கள் தமக்குள்

பேசிக்கொண்டனர்:

அரசர்பெருமானின் போர்க்களப் பேச்சைக் கேட்ட புல்லும் வீரம் கொள்ளும்! இந்தப் படை தோற்றல் வேறு எந்தப் படைதான் வெல்லும்!” என்றான் ஒரு வீரன்.

"முழுவதும் கேட்டனையோ ?” என்றான் மற்றொரு வீரன்.

66

ஆம். முழுவதும் கேட்டேன். இங்கு வர எனக்குச் சற்றும் மனம் இல்லை. ஆணையை மீறுவது கூடாது என்று வந்தேன். இல்லையேல், போர்க்களத்துக்கே போயிருப்பேன். நமக்குப் பாக்கியம் இல்லை, என் செய்வது?” என்றான் முதலில் பேசிய வீரன்.

"பாக்கியம் இல்லை என்பதல்ல. அந்தக் கோணவாய்ச் சடையன், குடிலனிடம் ஏதோ சொல்லி நம்மை எல்லாம் இங்கே வைத்து விட்டான்” என்றான் இரண்டாவது வீரன்.

66

என்னையும் அவன் கெடுத்தான். சண்டி சங்கரன் பகைவர் சேனையுடன் வந்திருக்கிறான். அவன் ஒருகாலத்தில் என்னையும் என் தாயையும் சந்தையில் பழித்துப் பேசினான். அவனைப் பழிவாங்கலாம் என்றிருந்தேன்” என்றான் மூன்றாவது வீரன்.

“சேர நாட்டினர் பிஞ்சில் பழுத்தவர்கள்; வாயாடிகள். அவர்களை எனக்குத் தெரியும். நான் ஜனார்த்தனம், வைக்கம் முதலான ஊர்களுக்குப் போயிருக்கிறேன்” என்றான் நாலாம் வீரன்.

66

“சண்டி சங்கரனை நான் விடப்போவதில்லை. அவனைத் தேடிக் கண்டுபிடித்து இந்த வாளுக்கு இரையாக்குவேன். அவன் போரில் செத்துக் கிடந்தால் அவன் தலையை நசுக்குவேன்” என்றான் மூன்றாவது வீரன்.

“சீச்சீ! பிணத்துடன் போரிடும் வீரனா நீ! மேலும், பொது எதிரியோடு நாட்டுக்காகப் போரிடுகிறோமேயல்லாமல், சொந்தப் பகைக்காகப் போரிடுகிறோம் இல்லை. நமது சுதந்தரத்தைப் பறிக்க வந்தபடியால் சேர நாட்டினருடன் போர் செய்கிறோம். இல்லை யானால், அவர் களுக்கும் நமக்கும் பகை என்ன ?” என்று கூறினான் முதல் வீரன்.

இச் சமயத்தில், நாராயணன் போர்க்கோலத்துடன் குதிரை ஏறி அவ்விடம் வருகிறான். இவன் கோட்டைக் காவல் வீரர்களுக்குத் தலைவன். இவனை வரவேற்கின்றனர், இவனுக்குக் கீழ்ப்பட்ட இரண்டு படைத் தலைவர்கள். இங்கு எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று