பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -20

மூன்றாம் களம்

பகல் வேளையில் அரண்மனையில் ஜீவக அரசன் போரில் பின்னடைந்தது பற்றிக் கவலையுடனும் துன்பத்துடனும் அமர்ந்து இருக்கிறான். சேவகர்கள் வாயிலண்டை நின்று தமக்குள் பேசிக் கொள்கிறார்கள். “அரசர்பெருமானுக்கு ஆறுதல் கூறுவோர் அருகில் இல்லையே, நாம் அரசருக்கு ஆறுதல் கூறுவது எப்படி ? இச்சமயம் நாராயணன் இங்கிருந்தால் ஆறுதல் கூறுவார்” என்று சொல்லிக் கொள்கின்றனர். “நாராயணர் இளவரசிக்கு ஆறுதல் சொல்லப் போயிருக்கிறார்” என்றான் ஒரு சேவகன். “அவர் இன்று போர்க்களத்தில் செய்த துணிச்சலான செயலினால் நாம் எல்லோரும் இன்று உயிர் பிழைத்தோம். இல்லையேல்......" என்று மற்றொரு சேவகன் கூறினான். அரசர் பெருமான் எழுந்து நிற்கிறார். ஏதோ சொல்லுகிறார்” என்றான் இன்னொரு சேவகன்.

66

66

அரசன் எழுந்து நின்று தனக்குத் தானே பேசிக்கொள்கிறான் : இன்னும் உயிர் வைத்திருக்கிறேன்! பாண்டியர் குலத்தின் பெருமை என்னோடு அழிந்தது ! இதற்கு முன்பு போர்க்களம் சென்ற பாண்டியர் வெற்றி பெற்றுத் திரும்பினர்; அல்லது போர்க்களத்தில் உயிர் விட்டனர். இன்று நான் போர்க்களத்தில் பின்னடைந்து ஓடி வந்தேன்! என் போன்ற வீணர் யாருளர்? இந்த வில் ஏன்? வாள் ஏன் எனக்கு? ... ஆம்! இந்த வாள் இப்போது எனக்குப் பயன்படும்!" என்று சொல்லிக் கொண்டு உறையிலிருந்து வாளை எடுக்கிறான்.

-

66

அரசன் தற்கொலை செய்துகொள்வான் என்று அஞ்சிய சேவகர் அவனிடம் ஓடுகின்றனர். அவ்வமயம் நாராயணன் அவ்விடம் வருகிறான். நிலைமையை உணர்கிறான். அரசே! இளவரசியார் மனோன்மணியைத் தாங்கள் மறந்துவிட்டீர் போலும்!" என்று கூறுகிறான். அதைக் கேட்ட மன்னன், தற்கொலை செய்துகொள்வதை விடுத்து, மனோன்மணியின் நிலையை உணர்ந்து மூர்ச்சித்து விழுகிறான். நாராயணனும் சேவகர்களும் குளிர்ந்த நீரைத் தெளித்தும், மெல்ல விசிறியும் அரசனை மூர்ச்சை தெளிவிக்கின்றனர்.

அரசன் தெளிந்து எழுந்து, "குழந்தாய்! குழந்தாய்! மனோன்மணீ!” என்று கூவி, துக்கத்தில் ஆழ்கிறான்.

நாராயணன், “அரசே! என்ன காரியம் செய்யத் துணிந்தீர்! தாங்கள் உயிர் விட்டால் இளவரசிக்கு ஆதரவு யார் உள்ளனர் ?

"