பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

219

தாங்கள் உயிர் விட்ட பிறகு இளவரசியார் உயிரோடிருப்பரோ ?” என்று கூறி அரசனைத் தேற்றுகிறான்.

"ஐயோ! நான் என்செய்வது! இருதலைக் கொள்ளி எறும்புபோல என் மனம் துடிக்கிறதே! போரிற் புறங்கொடுத்து ஒடிவந்து இன்னும் உயிரை வைத்துக்கொண்டிருப்பதோ மானம்!”

"பெருமானடிகளே! உயிரை மாய்த்துக்கொள்வது வீரம் அன்று. பெருந் துன்பம் நேரிட்டபோது சுற்றத்தாரை விட்டு உயிர் நீப்பது வீரம் அன்று” என்றான் நாராயணன்.

99

"போர்க்களத்தில் ஓடியவனுக்கு வீரம் என்ன இருக்கிறது என்றான் அரசன்.

66

இடம் காலம் கருதிப் போரில் பின்னடைவது வீரம்தான். சூழ்ச்சியுடன் சேர்ந்த வீரமே வீரம். காலம் இடம் கருதிப் பின் வாங்குவது வீரந்தான்; கண்ணை மூடிக்கொண்டு போரில் உயிர் விடுவது வீரம் அல்ல.'

وو

"போதும் போதும், உமது நியாயம் ! என் மகளுக்காக என் உயிரை வைத்திருக்கிறேன். நான் இப்போது வெறும் மனிதன். அரசனும் அல்லன், பாண்டியனும் அல்லன்” என்று கூறிச் சேவகர்களை அழைத்து, “என்னுடன் இருங்கள்...ஏன் நிற்கிறீர்கள்?”என்று கேட்டான்.

சேவகர் மனம் கலங்கி, “பெருமான் அடிகளே ! தாங்கள் கூறுவது என்ன!...” என்று கூறுகின்றனர்.

66

وو

அரசன் என்றும், அடிகள் என்றும் என்னைக் கூறாதீர். பாண்டியன் போர்க்களத்தில் இறந்துபோனான். நான் வெற்று மனிதன் என்றான் பாண்டியன்.

66

‘அரசர்பெருமானே! வெற்றுரை வழங்காதீர்கள். அதோ பாரும், அவர்கள் கண்ணீர் விடுகின்றனர்” என்றான் நாராயணன்.

"ஏன் வருந்துகின்றீர்கள்? வாருங்கள் வாருங்கள்" என்றான்

அரசன்.

66

சூரியனைக் கண்டால் அல்லவா தாமரைகள் மலரும்? அரசர் பெருமானே வருந்தினால் எங்களுக்கு வாழ்வேது?” என்றான் சேவகன். அதைக் கேட்ட அரசன் திடங்கொண்டான். சேவர்களுக்கு