பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -20

நூலை இயற்றினார். கோல்ட்ஸ்மித்து என்னும் ஆங்கிலப் புலவர் இயற்றிய The Vicar of Wakefield என்னும் நூலில் உள்ள ஒரு கதைப்பாட்டைத் தழுவி சிவகாமி சரிதத்தை இயற்றினார். குறள் வெண் செந்துறைப் பாவினால் அமைந்த சிவகாமி சரிதம் ஐம்பது செய்யுளைக் கொண்டது. அந்நூலின் காப்புச் செய்யுள் இது:

66

நானோ சிவகாமி நற்சரிதஞ் செப்புவனென்

றோனோ தடுமாற்ற மென்னெஞ்சே! - மானோய் தீர்

போதகமே செய்யுமுக்கட் போதகமே நம்போதப்

போதகமே வீற்றிருக்கும் போது.

99

இந்தச் சிவகாமி சரிதத்தைப் பிறகு இவர் தமது மனோன் மணீய நாடகத்தில் இணைத்துவிட்டார். இணைத்தபோது,இந்தக் காப்புச் செய்யுளை நீக்கிவிட்டார்.

தமிழ்ப் புலமையும் ஆங்கிலப் புலமையும் நிறைந்து, பல சாத்திரங்களைக் கற்றறிந்த இந்த நல்லறிஞர் நடுவயதிலே 42-வது ஆண்டிலே காலமானது வருந்தத்தக்கது. வெண்ணெய் திரண்டு வருகிற சமயத்தில் தாழி உடைந்ததுபோல, சிறந்த நல்ல நூல்களை எழுதித் தமிழ்மொழிக்குத் திருப்பணி செய்யத் தொடங்கிய காலத்தில் மரணம் அடைந்தார். மேலும் இருபது முப்பது ஆண்டுகள் வாழ்ந்திருப் பாரானால், நல்ல சிறந்த நூல்களை இயற்றியிருப்பார் என்பதில் சற்றும் ஐயம் இல்லை. இவர் எழுதிய ஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி, தமிழ் இலக்கிய வரலாற்றில் சில மைல்கற்கள் முதலிய ஆங்கிலக் கட்டுரைகள் தமிழ் நாட்டுச் சரித்திர வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறுகளுக்குப் பெரிதும் துணையாக இருக்கின்றன.

ராய்பகதூர் பெ. சுந்தரம் பிள்ளையவர்களின் காலக் குறிப்பு:

ஆண்டு

1855 பங்குனி மாதம் 28ஆம் தேதி சுந்தரம் பிள்ளையவர்கள் பிறந்தார்.

1876

1877

பி.ஏ. வகுப்பில் தேறினார். திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் ஆசிரியராக அமர்ந்தார்.

சிவகாமி அம்மையாரைத் திருமணம் செய்துகொண்டார். திருநெல்வேலியில் ஆங்கிலத் தமிழ் உயர்தரப் பள்ளியின் தலைமை ஆசிரியராக அமர்ந்தார்.