பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

ஆறுதல் கூறத் தொடங்கினான். “வீரர்களே! துன்பம் ஏன், துயரம் ஏன்? போரை இழந்து விட்டோம் என்றா எண்ணுகிறீர்கள்? நமது படை அழியவில்லை, கோட்டை அழியவில்லை. இனியும் போர் செய்வோம்! வெல்லுவோம்! புகழை நிலைநிறுத்துவோம்!”

நாராயணன், “அதற்கென்ன ஐயம் ? அரசே! தாங்கள் இப்போது கூறியவை முழுவதும் உண்மை. நீரின் ஆழத்திற்கு ஏற்ப தாமரைத் தண்டு உயர்ந்து வளர்ந்து மேலே வருவது போல, ஒருவருடைய ஊக்கத்தின் அளவாகத்தான் அவருடைய மேன்மையும் வளர்கிறது. அடிக்க அடிக்க மேலெழும்பும் பந்துபோல, மேன்மேலும் முயற்சி செய்தால் இன்பம் உண்டு. அரசே! தாங்கள் கூறியபடியே மன ஊக்கமும், தளரா முயற்சியும், தகுந்தவர் உதவியும் இருக்குமானால் ஊழையும் வெல்ல லாம்; போர் வெல்வதோ அரிது?" என்று கூறினான். அவ்வமயம் குடிலனும் பலதேவனும் அவ்விடம் வருகின்றனர்.

ன்

அரசன் உற்சாகத்துடன் உயிரோடிருப்பதைக் கண்டு குடிலன் வியப்படைகிறான். 'தகுந்தவர் உதவி' என்று நாராயணன் கூறியது என்ன? என்று தனக்குள் ஐயுறுகிறான். தான் மிகுந்த வருத்தம் அடைந்தவன்போல முகத்தை வைத்துக்கொண்டு ஒருபுறம் ஒதுங்கி நிற்கிறான். அரசன் குடிலனையும் பலதேவனையும் கண்டு அழைக்கிறான். குடிலன், சூதுவாது தெரியாதவன் போலவும், உண்மையாக உழைப்பவன் போலவும் பேசுகிறான். தன் மகன் பலதேவனை அருகில் அழைத்து அவன் மார்பில் உள்ள காயத்தைக் காட்டுகிறான்.

66

"இது என்ன காயம்! அம்பு பட்ட காயம்போல் தெரிய வில்லையே” என்றான் அரசன்.

குடிலன்: “இது அன்பின் அறிகுறி! பகைவரும் பொய்யரும் இக் காயத்தைப்பற்றிப் பலவாறு கூறுவர். உண்மையில்...'

66

‘வருந்தாதே! வெற்றியும் தோல்வியும் இயல்புதான். அதற்காகக் கவலை வேண்டாம். நாளைக்கு வெல்லுவோம்”என்று கூறினான் அரசன்.

குடிலன், தன்னுடைய சூதான செயல்களினால் போரில் தோல்வி ஏற்பட்டதை அரசன் தெரிந்துகொள்ளவில்லை என்று அறிந்து தைரியம் அடைகிறான். பிறகு அரசனிடம் கூறுகிறான்: “நெடுநாளாகத் தங்கள் பணிவிடைக்காகவே அடியேனுடைய உடல் பொருள் ஆவியை வைத்திருந்தும், இந்தப்போரிலே, கொடியவர் சிலர் செய்த சூது