பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

221

காரணமாக, நான் மனம் தடுமாற்றம் அடைந்தேன். அதை நினைக்குந் தோறும், கண்ணில் விழுந்த மணல் அரிப்பதுபோல என் நெஞ்சை அரிக்கிறது.” பலதேவனைக் காட்டி, "இதோ, இவன் அடைந்த புண் போல நானும் போரில் புண்ணடையாமற் போனது எனக்குப் பெருந் துயரமாக இருக்கிறது. தங்கள் கையில் உள்ள வாளினால் என் மார்பிற் குத்தி என் உயிரைப் போக்கினால், மகிழ்ச்சியோடு சாவேன்" என்றான். "உம்மைப் போல் இராஜ பக்தி உள்ளவர் யார்?” என்று அரசன் குடிலனைப் புகழ்கிறான்.

இதையெல்லாம் பார்த்தும் கேட்டும் நின்றிருந்த நாராயணன், இதென்ன நாடகம்! இந்தக் கோழைப் பயலுக்கு மார்பில் எப்படிப் புண் பட்டது! போர் செய்து பட்ட புண் இது அல்ல. இதை அறிய வேண்டும்' என்று தனக்குள் சொல்லிக்கொண்டு போகிறான்.

அப்போது குடிலன் கூறுகிறான்: “அரசருடைய திருவடிகளில் பணிவிடை செய்யத் தொடங்கிய நாள் முதலாக எனக்கென ஒன்றும் கேட்கவில்லை. என் மார்பைப் பிளந்து அதன் உள்ளே பார்ப்பீரானால், அங்கு அரசர்பெருமானுடைய பெயர் எழுதப்பட்டிருப்பதைக் காண்பீர். அது உண்மையா இல்லையா என்பதை அப்பொழுது அறிவீர்கள்.” இவ்வாறு கூறி முழந்தாளிட்டுப் பணிந்து அழுகிறான். அரசன்: குடிலரே! எழுந்திரும். வருந்தாதீர்! உம்முடைய மனத் துயரத்தை நான் அறிவேன். சற்று முன்புதான் நானும் தற்கொலை செய்து கொள்ளத் துணிந்தேன் ; நாரயணன் அப்போது வந்து தடுத்திருக்கா விட்டால்..."

66

குடிலன் தனக்குள்; பாவி! இப்போதும் கெடுத்தான் என்று சொல்லிக்கொள்கிறான்.

ஜீவகன் கூறுகிறான்: “அமைச்சரே! வாளை உறையில் இடவில்லை. நாளையும் போர் செய்வோம். போருக்கு அஞ்சியா ஓடி வந்தோம்?"

“யார் அஞ்சினார் ! அப்படி நினைப்பது தவறு.” நாராயணன் நின்ற இடத்தைப் பார்த்துக்கொண்டே, “ஒரு சிறுவனை இரண்டு நாள் போர் செய்து வென்றார்கள் என்று பிறர் கூறுவதற்கு அனுகூலமாகச் சிலர் சதி செய்கிறார்களே என்று தான் என் மனம் வருந்துகிறது. நாம் களத்தைவிட்டு வந்தது சரி என்று போர்முறையை யறிந்தவர் ஒப்புக் கொள்வார்கள். வேட்டைநாய் ஒரே ஓட்டமாய் ஓடிக் கெளவும். சிங்கம் பதுங்கிப் பாயும் ; பாய்ந்தால் குறி தவறாது. நாம் மீண்டுவந்தது, மீனைப்