பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

பிடிக்கத் தூண்டில் முள்ளில் இரையை வைத்தது போலாகும். நாளைக் காலை சேரனையும் அவன் சேனையையும் சின்னாபின்னம் செய்வோம். ஒருவேளை நமது கருத்தை அறிந்து இன்று இரவே அவன் திரும்பிப் போய்விடுவானோ என்றுதான் அஞ்சுகிறேன் என்று சமயத்துக்கு ஏற்றவாறு பேசினான் குடிலன்.

66

என்னவானாலும் ஆகட்டும்! நாளைக் காலை போர் செய்வோம்” என்றான் அரசன்.

66

இச் சமயத்தில், சேரன் அனுப்பிய தூதன் ஒருவன் வந்தான். சேரன் சமாதானத்திற்குத் தூது அனுப்பினான் போலும் என்றான் குடிலன். வந்த தூதன் அரசனை வணங்கிக் கூறுகின்றான்: அருளுடைய மனமும், தெளிவுடைய அறிவும், வீரம் பொருந்திய உடம்பும் உடைய என்னுடைய அரசர்பெருமான் என்னைத் தூது அனுப்பினார். இன்று நிகழ்ந்த போரில் யார் வென்றவர் என்பதைத் தாங்கள் அறிவீர்கள். ஆகவே, ஒருகுடம் தாமிரவர்ணி, நீரும், ஒரு வேப்ப மாலை யும் எனது அரசருக்குக் கொடுத்துத் தாங்களும் அவர் ஆணைக்கு அடங்கு வீரானால், வாழலாம். கோட்டை இருக்கிறது என்று கருதிப் போருக்கு வருவது மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போலாகும். பொழுது விடிவதற்குள்ளாக வேப்பமாலையும் தாமிரவர்ணி நீரும் தருவீரானால் போர் நிற்கும்; இல்லையேல் போர் நிகழும். இரண்டில் எது தங்கள் கருத்தோ அப்படியே செய்யுங்கள்.’

தூதன் கூறியதைக் கேட்ட அரசன், “தூதுவ! நன்றாகச் சொன்னாய்! சிறுவனாகிய உன் அரசன் அடுத்த போரில் என்ன நேரிடுமோ என அஞ்சி உன்னைத் தூது அனுப்பினான் என்பது நன்றாகத் தெரிகிறது. நீ கூறியதற்கு விடை இது: சேரன் தாமிரவர்ணி நீரையும் வேப்ப மாலையையும் பிச்சை கேட்கிறான். அவன் கேட்கும் பொருள்கள் எனக்குச் சொந்தம் அல்ல; அவை பாண்டியர் பரம்பரைச் சொத்து. அதைக் கொடுக்க நமக்கு உரிமை இல்லை. பொதுச் சொத்தைத் தானம் செய்வது முறையல்ல. நாளை, போர்க்களத்தில் சந்திக்கலாம் என்று சொல்லுக.

இந்த மறுமொழியைக் கேட்ட தூதன், “தாங்கள் நிலைமையைச் சற்றும் தெரிந்துகொள்ளவில்லை. உமது வலியைப் பெரிதெனத் தவறாகக் கருதுகிறீர். எடுப்பார் கைப்பிள்ளையைப்போல இருக்கிறீர். இன்று சொற்ப நேரத்தில் எமது அரசர் வென்றதைச் சிந்தித்துப் பாரும்