பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

வந்தான்?' என்று தனக்குள் எண்ணுகிறான். பிறகு, குடிலனை அழைப்பித்து அவனிடம், முனிவர் கூறிய சுரங்க வழியைப் பற்றியும், அவர் அவ் வழியாகத் தன்னைத் தப்பிப்போக அழைத்தது பற்றியும் கூறுகிறான். சுரங்க வழி, கோட்டையில் முனிவர் தங்கும் அறையில் இருக்கும் என்று குடிலன் ஊகித்தறிந்து, அதனை இகழ்ந்து பேசுகிறான். “இவ்வளவு பெரிய கோட்டையை அமைத்த நமக்குச் சுரங்க வழி அமைக்கத் தெரியாதா? அது அவசியம் இல்லை என்றுதானே செய்யாமல் விட்டோம்” என்று கூறுகிறான். முனிவருடன் இளவரசியைச் சுரங்க வழியாக அனுப்புவது சரியா என்று அரசன் கேட்க, அனுப்புவதில் தவறில்லை என்றும், ஆனால் திருமணம் செய்துவைத்த பிறகு அனுப்பவேண்டும் என்று கூறுகிறான். “திருமணம் செய்ய இது தகுந்த காலமா? யாருக்கு அவளைத் திருமணம் செய்விப்பது?" என்று அரசன் கேட்க, குடிலன், தன் மகனுக்குத் திருமணம் முடிக்கலாம் என்று குறிப்பாகக் கூறகிறான். நெருக்கடியான காலத்தில் வேறு வழியில்லை என்று கண்டு; அரசன் அதற்கு ஒப்புக் கொள்கிறான். ஆனால், மனோன்மணி இத் திருமணத் திற்கு இசை வாளோ என்று ஐயுறுகிறான். வஞ்சகனாகிய குடிலன், "இளவரசி இசை வாள். அவளுக்குப் பலதேவன்மேல் ஆசை உண்டு. அதற்கு மாறு பாடாகத் தாங்கள் கருதுவதுதான் அவளுக்கு வருத்தமாக இருக்கிறது. பலதேவனும் அவள்மீது காதல்கொண்டிருக்கிறான் என்று சொல்ல, அரசன்

உண்மையென நம்பி, இன்று இரவு இரண்டாவது யாமத்தில் திருமணம் செய்யலாம் என்று கூறி, மனோன் மணியிடம் இச் செய்தியைக் கூறிவருகிறேன் என்று சொல்லிப் போகிறான்.

தனியே இருக்கும் குடிலன் தன் சூழ்ச்சி நிறைவேறியதைக் கண்டு மனம் சந்தோஷப்படுகிறான். மனோன்மணி திருமணத்தை மறுப் பாளோ என்று நினைத்து அஞ்சுகிறான். “மறுக்க மாட்டாள். விருப்பம் இல்லாவிட்டாலும் மௌனமாக இருப்பாள். மௌனம் சம்மதத்தின் அடையாளம் என்று கூறித் திருமணத்தை நிறைவேற்றி விடலாம். நல்லகாலம்; நாராயணனும் சிறையில் இருக்கிறான். முனிவர் வருவதற்குள் திருமணத்தை முடித்துவிட்டால் பிறகு அவர் என்ன செய்ய முடியும்? முனிவர் சுரங்கம் செய்திருக்கிறார் என்று அரசர் கூறினார். அதைப் பார்க்கவேண்டும். நமது ஆபத்துக் காலத்துக்கு அது உதவியாக இருக்கும்... ஐயோ ! இந்தச் சேவகர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தோம், என்னென்ன வெகுமதி அளித்தோம்! நன்றி